லயன் காமிக்ஸ்
லயன் காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரகதை இதழ். முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாஷ் பதிப்பகத்தாரே பதிப்பித்து வெளியிடுகின்றனர்.[1][2]
வரலாறு
[தொகு][[படிமம்:LION Books.jpg|thumb|[[படிமம்:LION Books.jpg|thumb|1x1px|கத்தி முனையில் மாடஸ்டி!

]]
லயன் காமிக்ஸ் | |
---|---|
துறை | {{{discipline}}} |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | S. விஜயன் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாதம் |
|1x1px]]
முத்து காமிக்ஸ் முதலில் 1972-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் M. சௌந்தரபாண்டியன் என்பவரால் வெளியிடப்பட்டது. முத்து காமிக்சின் முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவி எனும் தலைப்பில் வெளிவந்தது, 128 பக்கங்களை கொண்டிருந்த அந்த முதல் புத்தகம் இந்திய ரூபாய் ₹0.90 பைசாவிற்கு விற்கப்பட்டது.
பின்னாளில் முத்து காமிக்சை ஆரம்பித்து வெளியிட்ட நிறுவனர் சௌந்தரபாண்டியனின் மகனான விஜயன் என்பவர் தந்தையை போலவே தானும் லயன் காமிக்ஸ் எனும் புதிய சித்திரக்கதை இதழை 1984 இல் வெளியிட்டார். லயன் காமிக்சின் முதல் இதழ் மாடஸ்டி பிளைசி எனப்படும் பிரிட்டிஷ் காமிக்ஸ் கதாநாயகியைக் கொண்டு கத்தி முனையில் மாடஸ்டி எனும் தலைப்பில் ₹2.00 ரூபாய் விலையில் வந்தது.
லயன் காமிக்ஸ் துவங்கிய சமயத்தில் அதன் எடிட்டர் விஜயனின் வயது 17, லயன் காமிக்ஸை வெற்றிகரமாக நடத்திய விஜயன் பின்னர் முத்து காமிக்ஸ் வெளியீடு எண்: 168, கடல் பிசாசு இதழில் இருந்து முத்து காமிக்சையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து திகில், மினி லயன் போன்ற காமிக்ஸ் இதழ்களையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தினார் விஜயன்.
1984 காலப்பகுதியில் லயன் காமிக்சிற்குப் போட்டியாக ராணி காமிக்ஸ் தமிழில் அறிமுகம் ஆகியது. ராணி காமிக்ஸை தினத்தந்தி நிறுவனத்தார் பதிப்பித்தனர். ஆயினும் 2005-ம் ஆண்டளவில் வாசிப்பு பெருமளவில் நலிவடைந்து ராணி காமிக்ஸ் வெளியீடு நிறுத்தப்பட்டது. 2000 ஆண்டின் துவக்கத்தில் கேபிள் டிவி, இண்டர்நெட், வீடியோ கேம்ஸ், சினிமாக்களின் வருகையின் தாக்கம் காரணமாக வாசிப்பு சுருங்கி போனது, வாசகர்கள் குறைவு காரணமாக கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ரா, மேத்தா காமிக்ஸ், அசோக் காமிக்ஸ் போன்ற தமிழ் சிறுவர் மாத இதழ்கள் அனைத்தும் நின்று போயின. அம்புலிமாமா எனும் சிறுவர் இதழ் 2013-ம் ஆண்டுவரை வந்து நின்று போனது. எனினும் லயன் காமிக்ஸ் இன்றளவும் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது பெருமளவில் வாசிப்பு குறைந்து போனதால் லயன் காமிக்ஸ் முன்பு போல கடைகளில் பெரும்பாலும் விற்கப் படுவதில்லை. ஆண்டு சந்தா வழியாகவும், புத்தக கண்காட்சி விழாக்களிலும் மட்டுமே லயன், முத்து காமிக்ஸ் விற்கப் படுகிறது. ஆரம்ப காலத்து வாசகர்கள் இன்றளவும் தொடர்ந்து ஆண்டு சந்தா செலுத்தி லயன், முத்துவை ஆதரித்து வருகின்றனர்.
2011 டிசம்பர் மாதத்தில் இருந்து லயன் காமிக்ஸ் வெளியீடுகள் குறித்து அறிவிக்க லயன்-முத்து வலைத்தளம் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வரும் இதழ்கள் குறித்து அறிவிப்பு செய்கிறார் எடிட்டர் S. விஜயன்.
முத்து காமிக்ஸ் நாயகர்கள்
[தொகு]பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்த கதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பிரிட்டிஷ் சிறுவர் இதழான ப்ளீட்வே பதிப்பகத்தின் பிரதம நாயகர்கள் முத்து காமிக்ஸில் முக்கிய நாயகர்களாக வலம் வந்தனர். இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, C.I.D. லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, சார்லி, மாண்ட்ரேக், பிலிப் காரிகன், போன்ற மிகவும் பிரபலமான ஆங்கில காமிக்ஸ் பத்திரங்கள் முத்துவில் தொடர்ந்து வந்தனர், பின்னாளில் பெல்ஜியத்தின் மிகப் பிரபலமான கேப்டன் டைகர், லார்கோ வின்ச், தோர்கல், ரிப்போர்டர் ஜானி, ப்ளூகோட் பட்டாளம், சிக் பில், ஆகிய நாயகர்களும் முத்துவில் தொடர்ந்து வந்தனர், இத்தாலியின் போனெல்லி பதிப்பகத்தின் டிடெக்டிவ் ராபின், மர்ம மனிதன் மார்டின், போன்ற நாயகர்களும் முத்து காமிக்ஸில் இடம் பெற்றனர்.
லயன் காமிக்ஸ்
[தொகு]1984-ம் ஆண்டு துவங்கப்பட்ட லயன் காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முக்கியமான இடத்தை கொண்டுள்ளது. 80, 90 களில் பல நாயகர்களின் கதைகளை வெளியிட்டு தமக்கென்று ஒரு நிலையான வாசக வட்டத்தையே உருவாக்கியிருந்தது. 2000, ஆண்டு பிறந்த போது கேபிள் டிவி, இணையம், வீடியோ கேம்ஸ் போன்றவைகளால் வாசகர்களின் வாசிப்பு திறனும் சிறுவர் இதழ்களை வாங்கும் திறனும் குறைந்து போனதால் 2010-ம் ஆண்டு வரை லயன், முத்து காமிக்ஸ் குறைந்த புத்தகங்களே வெளிவந்தன. இந்த பத்தாண்டுகளில் பல சிறுவர் இதழ்கள் வெளிவராமல் நின்றே போனது. 2012 ஆண்டிற்கு பிறகு லயன், முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்று கூற வேண்டும். எடிட்டர் விஜயன் பெரும் முனைப்புடன் அயல்நாட்டில் வரும் உயர்தரத்துடன் வண்ணப் புத்தகங்களை வெளியிட்டு லயன், முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 2012-ம் ஆண்டிலிருந்து 2025 வரையில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 இதழ்களை தயாரித்து வெளியிட்டு தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் சாதனை புரிந்துள்ளார். தொடர்ந்து இன்றளவும் அமெரிக்க, ஐரோப்பிய காமிக்ஸ் புத்தகங்களை உரிமம் வாங்கி தமிழில் நல்ல தரத்துடன் பதிப்பித்து வருகிறார் விஜயன்.
லயன் காமிக்ஸில் பெரும்பாலும் டிடெக்டிவ், அட்வென்சர், கௌபாய், போர், சாகசம் என அனைத்து வகையிலும் காமிக்ஸ் தொடர்ந்து வெளி வருகிறது. மாடஸ்டி பிளைசி, ஸ்பைடர், ரோபோட் ஆர்ச்சி, டயபாலிக், டெக்ஸ் வில்லர், XIII, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், லக்கி லூக், சிக் பில், போன்ற நாயகர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
திகில் காமிக்ஸ்
[தொகு]1986-ம் ஆண்டு ஜனவரியில் எடிட்டர் விஜயனால் திகில் காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. திகில், பெயருக்கேற்றார் போல பல திகில் கதைகளை கொண்டிருந்தது. இங்கிலாந்தில் வெளிவந்த சிறுவர் ஹாரர் இதழான ஸ்க்ரீம் வார இதழின் கதைகள் பெரும்பாலும் திகில் இதழில் மாதந்தோறும் வெளிவந்தது. பின்னர் பிராங்கோ பெல்ஜிய படைப்புகளும் தொடர்ந்து வந்தது. தொடர்ச்சியாக கோல்டு கீ எனும் அமெரிக்க பதிப்பகத்தின் கதைகளும் வெளிவந்தன. மொத்தம் 61 இதழ்கள் வெளிவந்து 1990-களின் நடுவில் திகில் நின்றுபோனது.
கேப்டன் பிரின்ஸ், கறுப்புக் கிழவி கதைகள், பேட்மேன், சாகச வீரர் ரோஜர், C.I.D. மார்ஷல், ரிப்போர்டர் ஜானி, XIII, ப்ருனோ ப்ரேசில் போன்ற நாயகர்கள் திகிலில் தொடர்ந்து வந்தனர்.
மினி லயன் காமிக்ஸ்
[தொகு]மினி லயன் பெரும்பாலும் கார்டூன் கதைகளை கொண்டிருந்தது. இதன் முக்கிய நாயகர்கள் என லக்கி லூக், சிக் பில் போன்றோரின் கதைகள் தொடர்ந்து வந்தன. மற்றும் டிஸ்னி அங்கிள் ஸ்க்ரூஜ் கதைகளும் வெளிவந்தன. இடையிடையே பிரிட்டிஷ் ப்ளீட்வே இதழ்களின் கதைகளும் இடம் பெற்றன. ரிப் கிர்பி, சார்லி, சுஸ்கி விஸ்கி, அலிபாபா, ஹெர்லக் ஷோம்ஸ் போன்ற நாயகர்களின் கதைகளும் வெளிவந்தது. மொத்தம் 40 புத்தகங்களோடு மினி லயன் நின்று போனது. ஜூனியர் லயன் நான்கு இதழ்கள் வெளிவந்து அதுவும் நின்று போனது.