லட்டைடீ
லேட்டிடே | |
---|---|
லேட்சு கேல்காரிபர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேர்கோடீயை
|
குடும்பம்: | லேட்டிடே ஜோர்டான், 1888[1]
|
பேரினம் | |
கட்டுரையில் பார்க்கவும். |
லேட்டிடே (Latidae) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கொடுவா மீன்களின் குடும்பமாகும். சுமார் 13 சிற்றினங்களை கொண்ட இந்தக் குடும்பம், முன்பு செண்ட்ரோபோமிடே குடும்பத்தில் துணைக் குடும்பமான லேட்டினேயில் வகைப்படுத்தப்பட்டது. 2004-ல் கிளைப்பாட்டியல் பகுப்பாய்வு மூலம் பொதுவான மூதாதையிலிருந்து தோன்றிய பலகுடும்பங்களுள் ஒன்றான குடும்ப நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.[2]
லேட்டிடே குடும்பத்தில் உள்ள சிற்றினங்கள் முழுமையடையாமல் பிரிக்கப்பட்ட முதுகு துடுப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. அல்லது இவை பிரிக்கப்பட்டால், துடுப்பின் முன் மற்றும் பின் பகுதிகளுக்கு இடையில் ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட முதுகெலும்புகள் காணப்படும். இவற்றின் வால் துடுப்பு பொதுவாக வட்டமானது. அனைத்து சிற்றினங்களும் 25 முதுகெலும்புகளால் ஆன முதுகெலும்பு நெடுவரிசையைக் கொண்டுள்ளன.[3]
இந்த குடும்பத்தில் உள்ள பல சிற்றினங்கள் முக்கியமான உணவு மீன்களாகும், மேலும் சில சிற்றினங்கள் மீன் உற்பத்திக்காக இவற்றின் வாழிட வரம்பிற்கு வெளியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 1950களில் விக்டோரியா ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நன்னீர் நைல் பெர்ச், ஒரு கடுமையான கொன்றுண்ணியாகும். 1950களில் ஏரியின் பூர்வீக மீன்கள் பலவற்றின் பேரழிவிற்கு காரணமாக அமைந்தது. இதனால் பல உள்ளூர் சிக்லிட்கள் அழிந்துவிட்டன.[4]
பேரினங்கள்
[தொகு]லேட்டிடே குடும்பம் தற்போதுள்ள மூன்று பேரினங்களுடன் அழிந்துபோன பேரினம் ஒன்றினையும் கொண்டுள்ளது:[3][5][6]
- †இயோலேட்சு சோர்பினி, 1970
- கைபோப்டெரசு கில், 1861
- லேட்சு குவியர், 1828
- சாம்மோபெர்கா ரிச்சர்ட்சன், 1848
† இந்த உயிரலகு அழிந்துவிட்டதைக் குறிக்கிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. doi:10.11646/zootaxa.3882.1.1. பப்மெட்:25543675.
- ↑ Otero, Olga (May 2004). "Anatomy, systematics and phylogeny of both Recent and fossil latid fishes (Teleostei, Perciformes, Latidae)". Zoological Journal of the Linnean Society 141 (1): 81–133. doi:10.1111/j.1096-3642.2004.00111.x.
- ↑ 3.0 3.1 J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. p. 432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6.
- ↑ Pringle, R.M. (2005). The Origins of the Nile Perch in Lake Victoria. BioScience 55 (9): 780-787.
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). "Latidae" in FishBase. December 2019 version.
- ↑ Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Genera in the family Latidae". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 22 February 2020