உள்ளடக்கத்துக்குச் செல்

லட்சுமண அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. எஸ். லட்சுமண அய்யர்
பிறப்புஜி. எஸ். லட்சுமண்
1918
கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
இறப்புசனவரி 2, 2011
கல்லறைகோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுசுதந்திரப் போராட்ட வீரர், சமூகச் சேவகர்
வாழ்க்கைத்
துணை
லட்சுமி

ஜி. எஸ் லட்சும அய்யர் (G. S. Lakshman Iyer, 1918 - சனவரி 2, 2011) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சேவரும், மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளரும் ஆவார்.[1] இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் 1918ஆம் ஆண்டில் பிறந்தார்.

காந்தியவாதி

[தொகு]

இவர் காந்தியடிகளின் சத்தியாகிரக வழியை சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தியவர் அல்ல. தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியடிகளின் கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தார்.

நகராட்சித் தலைவர்

[தொகு]

இவர் [1952-1955 மற்றும் 1986- 1991] ஆகிய ஆண்டுகளில், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தலைவராக இருந்தபோது நகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை தடை செய்தார்.[2] இந்தியாவிலேயே இந்தத் திட்டத்தை கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் தான் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது.[3]

தீண்டாமை ஒழிப்பில் பங்கு

[தொகு]

1928ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்த போது அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பகுதியிலிருந்து ஆதிதிராவிட மக்களை அழைத்து சமபந்தி விருந்து நடத்தினார். அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதித்தார். இதனால் இவருடைய இனத்தைச் சேர்ந்தவர்களால் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி லட்சுமண அய்யரின் சகோதரியான ஆனந்தி லட்சுமியையும், அவரது புகுந்த வீட்டினர் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

திருமண வாழ்க்கை

[தொகு]

இவருக்கு பதினாறு வயதானபோது, காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டனான சுந்தரராம அய்யர் அலமேலு தம்பதியினரின் மகள் லட்சுமியை திருமணம் செய்து வைத்தனர்.[சான்று தேவை]

சிறை வாசம்

[தொகு]

திருமணத்திற்குப் பின்னர் லட்சுமண ஐயர் அவரது மனைவி லட்சுமியையும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காந்தி - லட்சுமண அய்யர் சந்திப்பு

[தொகு]

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 1942 ஆம் ஆண்டு காந்தியடிகளை லட்சுமண அய்யர் சந்தித்தார். அதன் பின்னர் சமூக மாற்றத்திற்கான பணிகளில் தொய்வின்றி பணியாற்றினார். குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு இயக்கம், பெண் குழந்தைகள் கல்வி போன்றவற்றில் அதிக அக்கறைச் செலுத்தினார். இவருடைய சேவையை கவரப்பட்ட காந்தி அடிகள் இவரை "ஹரிஜன் சேவக் சங்க்" அமைப்புச் செயலாளராக நியமித்தார். தீண்டாமையால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்தியின் அழைப்பை ஏற்று அவர் பணி செய்தார்.

சிலை அமைப்பு

[தொகு]

லட்சுமண அய்யரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அவரது முழு உருவ சிலையை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகத்து 29, 2018 அன்று திறந்து வைத்தார்.

இறப்பு

[தொகு]

இவர் சனவரி 2, 2011 அன்று காலமானார். இவரது நினைவிடமானது ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "லட்சுமண அய்யர் எனும் சாதி ஒழிப்புப் போராளி". The Hindu - Tamil. 22 February 2016. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/article8266914.ece. பார்த்த நாள்: 28 September 2017. 
  2. "Gobichettipalayam - Overview". Gobichettipalayam. Archived from the original on 29 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Magsaysay winner Bezwada Wilson: It's been a long journey, slow progress". OneIndia-News. 28 July 2016. https://www.oneindia.com/feature/interview-magsaysay-award-winner-bezwada-wilson-karnataka-2165743.html. பார்த்த நாள்: 28 September 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமண_அய்யர்&oldid=3570082" இலிருந்து மீள்விக்கப்பட்டது