ரோஸ் கோபுரம்
Appearance
14 செப்டெம்பர் 2007 இல் ரோஸ் கோபுரம். (நடுவில் காணப்படுவது)
ரோஸ் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2004–2007 |
திறப்பு | அக்டோபர் 2008 |
பயன்பாடு | விடுதி |
உயரம் | |
Antenna/Spire | 333 மீ (1,093 அடி) |
கூரை | 315 மீ (1,033 அடி)[1] |
கடைசித் தளம் | 258 மீ (846 அடி)[1] |
தள எண்ணிக்கை | 72 |
தளப் பரப்பு | 51,445 மீ² |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | கத்தீப் அன்ட் அலாமி குழுமம் |
ஒப்பந்தகாரர் | அராபியன் கட்டுமான நிறுவனம் |
Developer | அப்கோ குழுமம் |
ரோஸ் கோபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 77 மாடிக் கட்டிடம் ஆகும். 333 மீட்டர் (1,093 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படும் கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். தொடக்கத்தில் இக் கட்டிடத்தை 380 மீட்டர் (1,247 அடி) உயரம் கொண்டதாகக் கட்டத் திட்டமிட்டிருந்தனர். எனினும், பின்னர் வடிவமைப்புக் காலத்தில் இதன் உயரம் குறைக்கப்பட்டது. கட்டுமான வேலைகள் 2004 ஆம் ஆண்டில் தொடங்கின. 2006 அக்டோபர் 24 ஆம் தேதி கட்டிடம் அதன் முழு உயரத்தை அடைந்தது. அக் கட்டிடத்தில் அமைந்துள்ள விடுதி "ரோஸ் ரொட்டானா சூட்ஸ்" ஆகும்.
குறிப்புகள்
[தொகு]