ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருரோடியம் டெட்ராகிசு(முப்புளோரோ அசிட்டேட், ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு இருமம்
| |
இனங்காட்டிகள் | |
31126-95-1 | |
ChemSpider | 380904 |
EC number | 631-136-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10985187 |
| |
பண்புகள் | |
C8F12O8Rh2 | |
வாய்ப்பாட்டு எடை | 657.87 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிற திண்மம் |
தீங்குகள் | |
{ | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு (Rhodium(II) trifluoroacetate) என்பது Rh2(O2CCF3)4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம்(II) டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. சில கரிமத் தொகுப்பு வினைகளில் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மற்றும் இதன் வழிப்பெறுதிகள் எக்சுகதிர் படிகவியல் மூலம் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல ஈருலோக கார்பாக்சிலேட்டு அணைவுகளில் காணப்படும் சீன விளக்கு கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுக்கொள்கிறது. இந்த கட்டமைப்பு Rh-Rh பிணைப்புக்கு இடமளிக்கிறது. இதன் இருப்பு இந்த Rh(II) இனத்தின் காந்தத்தன்மையை விளக்குகிறது. Rh-Rh பிணைப்பு இடைவெளி 238 பைக்கோமீட்டர் ஆகும்.[2]
நீரற்ற இந்த அணைவுச் சேர்மம் பச்சை நிறத்துடன் ஆவியாகும் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. ரோடியம்(II) அசிடேட்டை சூடான முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.:[3]
- Rh2(O2CCH3)4 + 4 HO2CCF3 -> Rh2(O2CCF3)4 + 4 HO2CCH3
இந்த வினை அசிட்டிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. Rh-Rh பிணைப்பு தக்கவைக்கப்படுகிறது.
வினைகள்
[தொகு]ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு பலவகையான லூயிசு காரங்களுடன் பெரும்பாலும் 2:1 விகிதாச்சார அளவுகளில் வினைபுரிந்து கூட்டுவிளைபொருள்களை உருவாக்குகிறது. இரண்டு Rh(II) மையங்களில் ஒவ்வொன்றிலும் "அச்சு" நிலைகளில் காரங்கள் பிணைக்கப்படுகின்றன:
- Rh2(O2CCF3)4 + 2 L → Rh2(O2CCF3)4L2 (L = CO, RCN, R2SO, R3P, ...)
ரோடியம்(II) அசிடேட்டைக் காட்டிலும் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மிகவும் பலவீனமான காரங்களுடன் கூட பிணைகிறது. அறுமெத்தில்பென்சீன் மற்றும் எண்கந்தகத்துடன் கூட்டு விளைபொருளை உருவாக்குகிறது.[4]
ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு ஈரசோ சேர்மங்களால் ஆல்க்கீன்களின் வளையபுரோப்பனேற்ற வினையை ஊக்குவிக்கிறது:[1]
- RCH\dCR'H + CH3CH2O2CCH(N2) -> cyclo\s(RCH)(R'CH)(CH3CH2O2CCH) + N2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Doyle, Michael P.; Davies, Huw M. L.; Manning, James R.; Yu, Yang (2018). "Dirhodium(II) tetrakis(trifluoroacetate)". EEROS. doi:10.1002/047084289X.rd461.pub2.
- ↑ Cotton, F. Albert; Dikarev, Evgeny V.; Feng, Xuejun (1995). "Unligated Dirhodium Tetra(trifluoroacetate): Preparation, Crystal Structure and Electronic Structure". Inorganica Chimica Acta 237 (1–2): 19–26. doi:10.1016/0020-1693(95)04662-S.
- ↑ Felthouse, Timothy R. (1982). "The Chemistry, Structure, and Metal-Metal Bonding in Compounds of Rhodium(II)". Progress in Inorganic Chemistry. Vol. 29. pp. 73–166. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470166307.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-09370-1.
- ↑ Cotton, F. Albert; Dikarev, Evgeny V.; Petrukhina, Marina A. (2001). "Neutral Cyclooctasulfur as a Polydentate Ligand: Supramolecular Structures of [Rh2(O2CCF3)4]n(S8)m (N:m=1:1, 3:2)". Angewandte Chemie International Edition 40 (8): 1521–1523. doi:10.1002/1521-3773(20010417)40:8<1521::AID-ANIE1521>3.0.CO;2-M.