ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்
இரேணிகுண்டா சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
இந்தியத் தொடருந்து நிலையம் | |||||
இரேணிகுண்டா சந்திப்பு முதன்மை நுழைவு வாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரேணிகுண்டா, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் | ||||
ஆள்கூறுகள் | 13°39′N 79°31′E / 13.65°N 79.52°E | ||||
ஏற்றம் | 113 m (371 அடி) | ||||
தடங்கள் | கூடூர்-காட்டுப்பாடித் தொடர், மும்பை-சென்னைத் தொடர் | ||||
நடைமேடை | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard (on ground station) | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படுகிறது | ||||
நிலையக் குறியீடு | RU | ||||
மண்டலம்(கள்) | South Coast Railway | ||||
கோட்டம்(கள்) | Guntakal | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம் (Renigunta Junction railway station)இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி புறநகர் பகுதியான இரேணிகுண்டாவில் உள்ளது. (நிலையக் குறியீடு:RU)[1] திருப்பதிக்கும், திருக்காளத்தி
த்திக்கும் புனித யாத்திரை செல்லும் மக்கள் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்புகளுக்குச் செல்லும் முதன்மைச் சந்திப்பு நிலையமாக இந்த தொடருந்து நிலையம் உள்ளது.
சந்திப்பு
[தொகு]ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நான்கு வெவ்வேறு திசைகளிலிருந்து நான்கு வழித்தடங்கள் உள்ளன. அவை
- ரேணிகுண்டா-திருப்பதி-பாக்லா-சித்தூர்-காட்பாடி(மேற்கு)
- ரேணிகுண்டா-கூடூர்-விஜயவாடா(கிழக்கு)
- ரேணிகுண்டா-கூட்டி-குண்டாக்கல்(வடக்கு)
- ரேணிகுண்டா-அரக்கோணம்-எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் (தெற்கு)
என்பனவாகும்.
வகைப்பாடு
[தொகு]குண்டக்கல் தொடருந்துக் கோட்டத்திலுள்ள இரேணிகுண்டா சந்திப்பு ஏ-பிரிவில் தரப்படுத்தி வகைப்படத்தப்பட்டுள்ளது.
வருமானம்
[தொகு]கீழே உள்ள அட்டவணை முந்தைய ஆண்டுகளில் பயணிகள் வருவாயைக் காட்டுகிறது. [2][Full citation needed]
ஆண்டு | வருவாய் (லட்சங்கள்) |
---|---|
2011-12 | 2597.10 |
2012-13 | 2126.82 |
2013-14 | 2515.89 |
2014-15 | 3104.91 |
மேலும் பார்க்க
[தொகு]- ரேணிகுண்டா
- குண்டக்கல் தொடருந்துக் கோட்டம்
- தெற்கு நடுவண் தொடருந்து மண்டலம் (இந்தியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Station Code Index" (PDF). பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
- ↑ "redevelopment_view_details".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)