ரேடான் இருபுளோரைடு
Appearance
(ரேடான் டைபுளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ரேடான் டைபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
ரேடான்(II) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F2Rn | |
வாய்ப்பாட்டு எடை | 260.00 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடான் டைபுளோரைடு (Radon difluoride) என்பது RnF2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ரேடானின் ஒரு சேர்மமாகும். பண்புகளால் இது ஒரு மந்தவாயு வகைச் சேர்மம் ஆகும். ரேடான் புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து திடநிலை சேர்மமாக மாறும் தன்மையைக் கொண்டுள்ளது. தெளிவற்ற விகிதாசாரத்துடன் பகுதிப்பொருட்களைக் கொண்டுள்ள இச்சேர்மத்தை ஆவியாக்க முயற்சித்தால் உருக்குலைந்து சிதைவடைகிறது.[1][2] மந்தவாயுக்களின் பிற இருமூலக்கூறுச் சேர்மங்களைப் போல இல்லாமல் இது ஒரு அயனிச்சேர்மமாக இருக்கலாம் என்று வேதிக்கணக்கீட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[3] ரேடான் ஒரு கதிரியக்கத் தனிமம் என்பதால் இச்சேர்மத்தின் பயன்பாடு மிகக்குறைவாகவே உள்ளது. மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டதாக கருதப்படும் ரேடான்–222 தனிமத்தின் அரை ஆயுட்காலம் 3.82 நாள்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fields, Paul R.; Stein, Lawrence; Zirin, Moshe H. (1962). Journal of the American Chemical Society 84 (21): 4164. doi:10.1021/ja00880a048.
- ↑ Stein, L. (1970). "Ionic Radon Solution". Science 168 (3929): 362–4. doi:10.1126/science.168.3929.362. பப்மெட்:17809133. Bibcode: 1970Sci...168..362S.
- ↑ Kenneth S. Pitzer (1975). "Fluorides of radon and element 118". J. Chem. Soc., Chem. Commun. (18): 760b – 761. doi:10.1039/C3975000760b.