உள்ளடக்கத்துக்குச் செல்

ரெகாலா நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெகாலா நீர்வீழ்ச்சி
Rehala Waterfalls
Map
அமைவிடம்இமாச்சலப் பிரதேசம், இந்தியா
வகைபல் அடுக்கு, கிண்ணம்
மொத்த உயரம்2,501 மீட்டர்

ரெகாலா நீர்வீழ்ச்சி (Rehala Falls) மணாலியிலிருந்து ரோதங் கணவாய் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராகல்லா அருவி, ராகலா அருவி ராக்லா அருவி என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.[1]. மதுக் கிண்ணம் போன்ற வடிவில் அடுக்கடுக்கான அருவி வகை என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் லே மனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுற்றுலா இடமாக ரெகாலா நீர்வீழ்ச்சி திகழ்கிறது.

காடுகள்

[தொகு]

நீர்வீழ்ச்சியானது அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இக்காடுகளில் உயரமான பிர்ச் மற்றும் தேவதாரு மரங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. பனி மூடிய இமயமலை சிகரங்களை பிரமாண்டமான இந்நீர்விழ்ச்சியின் பின்னணியில் காணலாம்.

பார்ப்பதற்குகந்த காலம்

[தொகு]

மார்ச்சு மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட செல்லலாம் [2].

எவ்வாறு செல்வது

[தொகு]
  • மணாலியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புண்டர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ரெகாலா நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம். தில்லியிலிருந்து நேரடியாக மணாலிக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்தும் நீர்வீழ்ச்சியை அடையலாம். ஏர் இந்தியா நிறுவனம் இப்பாதையில் விமானங்களை இயக்குகிறது. இதர தனியார் நிறுவனங்களும் விமான சேவையை வழங்குகின்றன[3]
  • தேசிய நெடுஞ்சாலை 21 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1 ஆகிய சாலைப் போக்குவரத்துத் தடங்கள் மனாலியையும் தில்லியையும் இணைக்கின்றன. பேருந்து மற்றும் இதர வாகன்ங்கள் மூலம் மணாலிக்குப் பயணத்தை மேற்கொள்ளலாம்.[3] மணாலியிலிருந்து நீர்வீழ்ச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 20 நிமிடப் பயணத்தில் நீர்வீழ்ச்சியை அடைய முடியும்[4]

பிற பொழுதுபோக்குகள்

[தொகு]

சிறந்த சுற்றுலா இடம் என்பதைத் தாண்டி இவ்விடம் ஒரு சிறந்த மலையேற்றத்திற்குரிய இடமாகவும் திகழ்கிறது [2].

பாதுகாப்பு

[தொகு]

இன்று வரையில் நீர்வீழ்ச்சிப் பாதையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழ்ந்ததாக அறியப்படவில்லை [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Explore the Stunning Rahala Waterfalls in Manali with Family". Toptraveldestinationsindia.com. Archived from the original on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Archived copy". Archived from the original on 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. 3.0 3.1 "Rahla Fall - Popular Picnic Spot in Manali". Discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  4. "Rahala Waterfalls Manali". Beautyspotsofindia.com. 19 March 2014. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெகாலா_நீர்வீழ்ச்சி&oldid=3846358" இலிருந்து மீள்விக்கப்பட்டது