உள்ளடக்கத்துக்குச் செல்

ரூல் நம்பர் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூல் நம்பர் 4
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்போசர் எல்வின்
தயாரிப்புசிமி இசட்
கதைபோசர் எல்வின்
இசைகெவின் டி`காசுதா
நடிப்பு
ஒளிப்பதிவுடேவிட் சான்
படத்தொகுப்புஎசு. பி. அகமது
கலையகம்ஒயிஎஸ்ஐஎம்ஒயி புரொடக்சன்
விநியோகம்ஏக்சன் ரியேக்சன் செனிசு
வெளியீடு3 நவம்பர் 2023 (2023-11-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரூல் நம்பர் 4 (Rule Number 4) என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். போசர் எல்வின் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரதீசு கிருசுணா, சிறீ கோபிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மோகன் வைத்யாசீவா இரவி உள்ளிட்ட பல நடிகர்கள் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை ஒயிஎசுஐஎம்ஒயி புரொடக்சன்சு பதாகையின் கீழ் சிமி இசட் தயாரித்தார். [1]

நடிகர்கள்

[தொகு]
  • தமிழாக பிரதீசு கிருசுணா
  • கவிதாவாக சிறீ கோபிகா
  • சின்னமலையாக மோகன் வைத்யா
  • இரவியாக சீவா இரவி
  • வங்கி ஊழியராக கலா கல்யாணி
  • பிர்லா போசு
  • கலா பிரதீப்

தயாரிப்பு

[தொகு]

திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2020 இன் தொடக்கத்தில் தொடங்கியது. இப்படத்தை ஒயிஎசுஐஎம்ஒயி புரொடக்சன்சு பதாகையின் கீழ் சிமி இசட் தயாரித்தார். படத்தின் தயாரிப்பாளரான பிரதீசு கிருஷ்ணா, சிறீ கோபிகாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் நான்சென்ஸ், 90 எம்எல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். டேவிட் ஜான் ஒளிப்பதிவையும், எசுபி அகமது படத்தொகுப்பையும் மேற்கொண்டனர்.[2] [3] .

வரவேற்பு

[தொகு]

தினத்தந்தியின் ஒரு விமர்சகர், "பிரதீசு கிருசுணா காதலித்து காதலியை துரத்தும் கதாபாத்திரத்தை இரசிக்கிறார்" என்று கூறினார். [4] [5] . மாலை மலரின் ஒரு விமர்சகர் "கதையின் நாயகனாக நடித்துள்ள பிரதீசு கிருசுணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று எழுதினார். [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rule Number 4UA". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/rule-number-4/movieshow/104943914.cms. 
  2. Dinamalar (2023-10-31). "ஏடிஎம் வேன் கொள்ளை பின்னணியில் உருவான ரூல் நம்பர் 4 | Rule No. 4 originated in the background of ATM van robbery". Retrieved 2023-11-07.
  3. மலர் (2023-11-07). "ராஷ்மிகாவை தொடர்ந்து ஏஐ அச்சுறுத்தும் அடுத்த நடிகை". Retrieved 2023-11-07.
  4. "Dinatahthi hosted at ImgBB" (in ஆங்கிலம்). Retrieved 2023-11-07.
  5. "ரூல் நம்பர் 4". Retrieved 2023-11-07.
  6. maalaimalar (2023-11-02). "Rule Number 4". Archived from the original on 2023-11-08. Retrieved 2023-11-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூல்_நம்பர்_4&oldid=4108793" இலிருந்து மீள்விக்கப்பட்டது