உள்ளடக்கத்துக்குச் செல்

ரீட்டா ரீட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீட்டா ரீட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரீட்டா

இனம்:
ரீ. ரீட்டா
இருசொற் பெயரீடு
ரீட்டா ரீட்டா
வேறு பெயர்கள்
  • பைமெலோடசு ரீட்டா ஹாமில்டன், 1822
  • ஆரியசு ரிடோயிடெசு வாலென்சியென்னசு, 1840
  • ரீட்டா ரிடோயிடெசு (வாலென்சியென்னசு, 1840)
  • ரீட்டா புச்சானானி பிளீக்கர், 1853
  • ஆரியசு குரிசிஜெர் அவ்வன், 1853
  • ரீட்டா குருசிஜெரா (அவ்வன், 1853)

ரீட்டா ரீட்டா (Rita rita) என்பது தெற்காசியா முழுவதும் காணப்படும் ஒரு வகைக் கெளிறு மீன் ஆகும். இது ஆப்கானித்தான், வங்களாதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாக்கித்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 150 செமீ நீளம் வரை வளரக்கூடிய பெரிய அளவிலான மீன் ஆகும். இம்மீன் மனித நுகர்வுக்காக வணிக ரீதியாகப் பிடிக்கப்படுகிறது.

வாழிடம்

[தொகு]

ரீ. ரீட்டா ஒரு மந்தமான, ஆறுகளின் அடிப்பகுதியில் வசிக்கும் கெளிறு மீன் ஆகும்.[2] ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் வசிக்கும் இம்மீன்கள், தூய்மையான தண்ணீரில் வாழ்வதை விடச் சேற்றை விரும்புகிறது.[3]

உணவு

[தொகு]

ரீ. ரீட்டா என்பது ஓர் அனைத்துண்ணி வகையான மீன். இதன் உணவின் பெரும்பகுதி மெல்லுடலிகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், பூச்சிகள் மற்றும் சிதைந்துபோன கரிமப் பொருட்களையும் உணவாகக் கொள்கிறது.[2][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. 2.0 2.1 Yashpal, Madhu; Kumari, Usha; Mittal, Swati; Mittal, Ajay Kumar (June 2006). "Surface architecture of the mouth cavity of a carnivorous fish Rita rita (Hamilton, 1822) (Siluriformes, Bagridae)". Belg. J. Zool. 136 (2): 155–162. http://www.naturalsciences.be/institute/associations/rbzs_website/bjz/back/pdf/BJZ%20136(2)/Volume%20136(2),%20pp.%20155-162.pdf. 
  3. Rahman, A.K.A., 1989. Freshwater fishes of Bangladesh. Zoological Society of Bangladesh. Department of Zoology, University of Dhaka. 364 p.
  4. Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. Volume 2. A.A. Balkema, Rotterdam, i-xxii + 543-1158
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_ரீட்டா&oldid=4121477" இலிருந்து மீள்விக்கப்பட்டது