உள்ளடக்கத்துக்குச் செல்

ரியான் பராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியான் பராக்
Riyan Parag
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரியான் பராக் தாஸ்[1]
பிறப்பு10 நவம்பர் 2001 (2001-11-10) (அகவை 22)
குவகாத்தி, அசாம், இந்தியா
உயரம்6 அடி[2]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடை
பங்குபந்துவீச்சாளர்-பல்திறனர்
உறவினர்கள்பராக் தாஸ் (தந்தை)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 256)7 ஆகத்து 2024 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்12
இ20ப அறிமுகம் (தொப்பி 113)6 சூலை 2024 எ. சிம்பாப்பே
கடைசி இ20ப30 சூலை 2024 எ. இலங்கை
இ20ப சட்டை எண்12
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–இன்றுஅசாம் (squad no. 5)
2019–இன்றுராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 5)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ இ20 இ20ப
ஆட்டங்கள் 29 49 105 6
ஓட்டங்கள் 1,798 1,720 2,361 57
மட்டையாட்ட சராசரி 36.69 41.95 32.34 14.25
100கள்/50கள் 3/11 5/8 0/21 0/0
அதியுயர் ஓட்டம் 155 174 84* 26
வீசிய பந்துகள் 2905 1,884 1007 38
வீழ்த்தல்கள் 50 50 41 3
பந்துவீச்சு சராசரி 37.06 31.00 29.63 3.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/68 4/27 3/9 3/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 25/– 43/– 0/–
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் துடுப்பாட்டம்
நாடு  இந்தியா
ஐசிசி 19-இற்குட்பட்ட உலகக்கிண்னம்
வெற்றியாளர் 2018 நியூசிலாந்து
மூலம்: ESPNcricinfo, 24 ஏப்ரல் 2024

ரியான் பராக் தாசு (Riyan Parag Das, பிறப்பு: 10 நவம்பர் 2021) இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் இந்திய அணியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் பல்-துறை ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இவர் அசாம் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும்,[3][4] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடுகிறார்.[5] இவர் இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணியில் விளையாடி 2018 உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.[6]

2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக விளங்கினார்.[7]

2024 சூலை 6 முதல் சிம்பாப்வேக்கான சுற்றுப்பயணத்திற்கான இந்திய தேசிய அணியின் இ20ப அணிக்கு இவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​இந்திய தேசிய அணியில் சேர்க்கப்பட்ட முதல் அசாமியர் ஆனார்.[8] 27 சூலை 2024 இல் தொடங்கிய இலங்கைச் சுற்றுப்பயணத்தின் போது பன்னாட்டு ஒருநாள், இ20ப போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கைக்கு எதிராக 2024 ஆகத்து 7 இல் விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "India U-19 vs England U-19: Manjot Kalra, Kamlesh Nagarkoti star as visitors claim 394-run victory". First Post. 27 July 2017. Archived from the original on 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  2. "Riyan Parag Profile". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.
  3. "Ranji Trophy: Assam reach 235/5 against Bihar". The Times of India. 2024-02-10. https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/ranji-trophy-assam-reach-235/5-against-bihar/articleshow/107574067.cms. 
  4. "Assam Cricket Team | ASSAM | Assam Team News and Matches". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-17.
  5. "Riyan Parag". ESPNcricinfo. Archived from the original on 30 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  6. "Prithvi Shaw to lead India in Under-19 World Cup". ESPNcricinfo. 3 December 2017. Archived from the original on 3 December 2017. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  7. "Riyan Parag is top class batter: R Ashwin expects more from breakout RR youngster". India Today.
  8. https://www.espncricinfo.com/story/india-squad-vs-zimbabwe-abhishek-sharma-riyan-parag-nitish-reddy-called-up-1440425

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியான்_பராக்&oldid=4062282" இலிருந்து மீள்விக்கப்பட்டது