உள்ளடக்கத்துக்குச் செல்

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா

ஆள்கூறுகள்: 26°18′17″N 73°01′01″E / 26.304611°N 73.016853°E / 26.304611; 73.016853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா
மெக்ரன்கர் ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்காவிற்கு மேலே
Map
வகைஇயற்கைப் பூங்கா
அமைவிடம்சோத்பூர், இராசத்தான்
அண்மைய நகரம்சோத்பூர்
ஆள்கூறு26°18′17″N 73°01′01″E / 26.304611°N 73.016853°E / 26.304611; 73.016853
பரப்பளவு70 எக்டேர்கள்
உருவாக்கம்2006 (2006)
இயக்குபவர்மெக்ரன்கர் அருங்காட்சியக அறக்கட்டளை
வருகையாளர்கள்+919571271000
திறந்துள்ள நேரம்காலை 7:00- மாலை 6:30 (கோடைகாலம்), காலை 8:00-மாலை 5:30 (குளிர்காலம்)
நிலைபொது மக்களுக்கு அனுமதி உண்டு

ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா (Rao Jodha Desert Rock Park) இந்தியாவின் இராசத்தானிலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்ரன்கர் கோட்டைக்கு அருகில் 72 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன. கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சிப்பதற்காக இந்த பூங்கா 2006 இல் உருவாக்கப்பட்டது. இது பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 880 மீ முதல் 1115 மீ வரையிலான நான்கு பாதைகளில் (மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீலப் பாதைகள்), பார்வையாளர்கள் செல்லலாம். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு உள்ளனர்.

ஜோத்பூர் தேசிய புவியியல் நினைவுச்சின்னம்

[தொகு]

இங்குள்ள ஜோத்பூர் சாம்பல் பாறைகள் இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னமாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது, அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு, மேம்பாடு மற்றும் புவிச் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. [1] [2] [3] ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்காவில் உள்ள எரிமலை பாறைகள் 745 முதல் 680 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ உருவானது. பூங்காவின் வழியாக ஒரு பள்ளம் செல்கிறது (வடக்கில் உள்ள ஒரு பரந்த நீர்ப்பிடிப்பிலிருந்து கோட்டையின் அடிவாரத்தில் உள்ள பதம்சர் ஏரிக்கு மழைநீரை எடுத்துச் செல்ல ஒரு பழைய ஆழ்குழாய் அல்லது கால்வாய்). இங்கு உடைந்த பாறையாலான கனிமத்துண்டுகள் காணப்படுகிறது. பெரிய மற்றும் இடைநிலை படிக அளவுகள் கொண்ட பாறைகள் மற்றும் நன்றாக கடினமான பாறைகள் முதல் பெரிய தானிய ரியோலைட் வரை காணப்படுகின்றன. [4]

தாவர மற்றும் விலங்கு வாழ்க்கை

[தொகு]

பூங்காவில் சுமார் 250 வகையான பூர்வீக தாவரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வறண்ட பகுதி பாறைவாழ்தாவரங்கள் உள்ளன. உகாய், வெள்ளெருக்கு போன்ற சில பொதுவான தாவரங்களும் காணப்படுகின்றன. [5]

இந்த பூங்காவில் பல ஊர்வன இனங்களும், 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் உள்ளன. பறவைகாணல் நிகழ்வுகளைப் பதிவு செய்து அதை இணையத்தில் காணும் ஈபேர்டு திட்டமும் உள்ளது. பாலூட்டிகளில் நாய்கள், இந்திய முகடு முள்ளம்பன்றி மற்றும் வடக்கு அல்லது ஐந்து-கோடுகள் கொண்ட பனை அணில் ஆகியவை அடங்கும்.

சூழலியல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனப் பாறை பூங்கா.
சூழலியல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனப் பாறை பூங்கா.

மேற்கோள்கள்

[தொகு]
  1. National Geological Monument, from Geological Survey of India website
  2. "Geo-Heritage Sites". பத்திரிகை தகவல் பணியகம். 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  3. national geo-heritage of India பரணிடப்பட்டது 2017-01-11 at the வந்தவழி இயந்திரம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை
  4. Rocks: about the different kinds of rock inside Rao Jodha Desert Rock Park. Mehrangarh Museum Trust.
  5. Krishen, Pradip (2011). Plant Guide to Rao Jodha Desert Rock Park. Jodhpur: Mehrangarh Museum Trust. pp. 31 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-910471-3-4.