ராவ்சாகேப் பாட்டீல் தான்வே
Appearance
ராவ்சாகேப் பாட்டீல் தான்வே, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1955-ஆம் ஆண்டின் மார்ச்சு பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஜால்னா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஜாவ்கேடா என்ற ஊரில் பிறந்ததவர். இதே மாவட்டத்தின் போகர்தன் என்ற ஊரில் இவர் வசிக்கிறார்.[1]இவர் தற்போது இந்திய நிலக்கரி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்றுள்ளார்.[1]
- போகர்தன் ஊராட்சித் தலைவர்
- 1990-99: மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
- மே 2019: பதினேழாவது மக்களவை உறுப்பினர்
- மே 2019: இணை அமைச்சர், நிலக்கரி அமைச்சகம், இந்தியா
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
பகுப்புகள்:
- வாழும் நபர்கள்
- மகாராட்டிர அரசியல்வாதிகள்
- 1955 பிறப்புகள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய அமைச்சர்கள்