உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜஸ்தான் ஓரியண்டல் ஆராய்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜஸ்தான் ஓரியண்டல் ஆராய்ச்சி மையம் என்பது ராஜஸ்தானியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பழைய ராஜஸ்தானி நாட்டுப்புற கலை படைப்புகள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களை சேகரித்து பராமரிப்பதற்கும் ராஜஸ்தான் அரசால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்நிறுவனம் 1954 ஆம் ஆண்டில் புரத்வாச்சாரியார் முனி ஜினவிஜயாஜியின் வழிகாட்டுதலின் கீழ் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது, [1]மேலும் இதன் மூலம் ராஜஸ்தான் மற்றும் அருகாமையிலுள்ள பகுதிகளின் பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்து, சேகரித்து, பாதுகாத்து, திருத்தி சமஸ்கிருதம், பிராகிருதம், அப்ரம்சா மற்றும் இந்தி-ராஜஸ்தானி மொழிகளில் வெளியிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் ஒரு திட்டவட்டமான நிர்வாக அமைப்பைக் கொடுத்து அதன் நோக்கங்கள் மற்றும் பொருள்களை மறுசீரமைத்தது, அதன்படி [[ஜோத்பூர்|ஜோத்பூ]ருக்கு இந்நிறுவனத்தின் தலைமையகத்தை மாற்ற அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த கலாச்சார ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஒரு விழாவில் அழகிய முறையில்அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிட பணிகள் நிறைவடைந்து 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் ஸ்ரீ மோகன் லால் சுகாடியாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமையகம் தற்போது வரையில் ஜோத்பூரில் உள்ளது. [2]

இந்த நிறுவனம் ராஜஸ்தானின் மினியேச்சர் ஓவியங்களின் பரந்த சேகரிப்புடன் கூடிய ஒரு சிறந்த கலைக்கூடத்தை அமைத்துள்ளது. அங்கே பல அரிய கையெழுத்து படிகள் கொண்ட நூல்கள் மற்றும் சம்புட் பாலக் மற்றும் கண்டிகா போன்ற இதழ்களின் கையெழுத்துப் பிரதிகளும் அடங்கும். இந்த நூலகத்தில் அவை போக பல்வேறு பழைய புத்தகங்கள் மற்றும் இதழ்களின் பரந்த தொகுப்பு உள்ளது.

சேகரிப்புகள்

[தொகு]

இந்நிறுவனத்தின் மொத்த சேகரிப்பில் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.24 லட்சம் ஆகும், [3] இவைகள் இந்நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் ஏழு கிளைஅலுவலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு வகையான மொழிகள், வடிவங்கள் மற்றும் சிறிய ஓவியங்களைக் குறிக்கும் பல்வேறு பாடங்களின் கையெழுத்துப் பிரதிகளால் நிறைந்துள்ளது.மேலும் அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மொழியில் (ராஜஸ்தானி) கையெழுத்துப் பிரதிகள் அந்த பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு வேத்-வைதிக், தர்ம சாஸ்திரம், தத்துவம், வரலாறு மற்றும் நாட்டுப்புறம் போன்ற பல்வேறு தலைப்புகளில் இந்த படைப்புகளை பாதுகாத்து வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan Oriental Research Institute". www.rajasthandirect.com.
  2. "Rajasthan Oriental Research Institute". www.artandculture.rajasthan.gov.in.
  3. "manuscript-collection". www.artandculture.rajasthan.gov.in.