உள்ளடக்கத்துக்குச் செல்

ரவீணா டாண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவீணா டாண்டன்
2021 இல் ரவீணா டாண்டன்
பிறப்பு26 அக்டோபர் 1972 (1972-10-26) (அகவை 52)
பம்பாய், (தற்போது மும்பை) மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–தற்போது
வாழ்க்கைத்
துணை
அனில் ததானி (தி. 2004)
பிள்ளைகள்4
உறவினர்கள்

ரவீனா டாண்டன் (Raveena Tandon, பிறப்பு 26 அக்டோபர் 1972) என்பவர் இந்தி படங்களில் நடித்ததற்காக அறியப்படும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தேசிய திரைப்பட விருது, இரண்டு பிலிம்பேர் விருதுகள், ஒரு பிலிம்பேர் ஓடிடி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது 2023 ஆம் ஆண்டில், இவருக்கு வழங்கப்பட்டது.[1]

இவர் இயக்குநர் ரவி டாண்டனின் மகளாவார். இவர் 1991 ஆம் ஆண்டு அதிரடி திரைப்படமான பட்டர் கே ஃபூல் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அது இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. டாண்டன் வணிகரீதியாக வெற்றிகரமான அதிரடித் திரைப்படமான தில்வாலே (1994), மோக்ரா (1994), கிலாடியோன் கா கிலாடி (1996), ஜித்தி (1997) ஆகியவற்றில் நாயகியாக நடித்ததன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[2] 1994 ஆம் ஆண்டு லாட்லா நாடகப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 1990களின் பிற்பகுதியில், படே மியான் சோட் மியான் (1998), துல்ஹே ராஜா (1998), அனாரி நம்பர்.1 (1999) மற்றும் பல வெற்றிகரமான நகைச்சுவை படங்களில் கோவிந்தாவுடன் இணைந்து பணியாற்றினார். இவர் குலாம்-இ-முஸ்தபா (1997), ஷூல் (1999) ஆகிய குற்றவியல் நாடகப்படங்களிலும் நடித்தார்.

2000 களில், அதாவது 2001 ஆம் ஆண்டு டாண்டன் தமன் மற்றும் அக்ஸ் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் கலைத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். இவை இரண்டும் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுதந்தன. இதில் முதல் படம் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் சிறப்பு நடிப்பு விருதைப் பெற்றார். திரைப்பட விநியோகஸ்தர் அனில் ததானியுடன் திருமணமான பிறகு, டாண்டன் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார். சஹாரா ஒன் தொலைக்காட்சி நாடகமான சாஹிப் பிவி குலாம் (2004), நடன உண்மைநிலை நிகழ்ச்சியான சக் தே பச்சே (2008), உரையாடல் நிகழ்ச்சியான இசி கா நாம் ஜிந்தகி (2012), சிம்ப்ளி பாடியேன் வித் ரவீனா (2014) போன்ற நிகழ்ச்சிகளில் இவர் அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றினார். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டாண்டன் பரபரப்பூட்டும் படமான மாத்ர் (2017) இல் நடித்தார். மேலும் நெற்ஃபிளிக்சு குற்றவியல் பரபரப்பூட்டும் தொடரான ​​ஆரண்யக் (2021) இல் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதைப் பெற்றார்.[3] டாண்டன் தனது அதிக வசூல் ஈட்டிய படமான கே. ஜி. எஃப்: அத்தியாயம் 2 (2022) இல் ஒரு துணைப் பாத்திரத்தில் நடித்தார்.[4]

டாண்டன் ஒரு சூழலியல் ஆர்வலராகவும், 2022 முதல் பீட்டாவுடன் பணியாற்றியுள்ளார். டாண்டனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், இரண்டு தத்தெடுக்கப்பட்டவையாகவும் இரண்டு கணவருடன் பெற்றவையாகும்.

துவக்ககால வாழ்க்கையும் பின்னணியும்

[தொகு]

டாண்டன் 26 அக்டோபர் 1972 [5][6] அன்று பம்பாயில் (இன்றைய மும்பை) பிறந்தார். இவரது பெற்றோர் திரைப்படத் தயாரிப்பாளர் ரவி டாண்டன் மற்றும் வீணா டாண்டன் ஆவார். டாண்டன் குணச்சித்திர நடிகர் மேக் மோகனின் மருமகள் மற்றும் அவரது மகள் மஞ்சரி மகிஜானியின் உறவினருமாவார். இவருக்கு ராஜீவ் டாண்டன் என்ற சகோதரர் உள்ளார், அவர் நடிகை ராக்கி டாண்டனை மணந்தார். அவர் நடிகை கிரண் ராத்தோட்டின் உறவினர் ஆவார்.

டாண்டன் ஜூகூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் தனது கல்வியைப் பெற்றார். மேலும் மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் பயின்றார். டாண்டன் ஒரு வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[7] ஆனால் ஜெனிசிஸ் பி.ஆர் இல் இவரது பணிப் பயிற்சியின் போது, இ​​வருக்கு முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

நடிப்பு வாழ்க்கை

[தொகு]

பட்டர் கே ஃபூல் (1991) திரைப்படத்தின் மூலம் டாண்டன் திரையுலகில் அறிமுகமானார், அது வெற்றி பெற்றது.[8]

1994 ஆம் ஆண்டில், டாண்டன் பத்து படங்களில் நடித்தார்: அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக இருந்தன. அதில் மோக்ரா, தில்வாலே, ஆதிஷ், லாட்லா. ஆகிய நான்கு படங்கள் அந்த ஆண்டின் அதிக வசூலித்த படங்களாக இருந்தன.[9] மொஹ்ரா திரைப்படத்தில் "து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்" பாடலில் இவர் நடித்ததன் மூலம் "மஸ்த் மஸ்த் கேர்ள்" என்று செல்லப்பெயர் பெற்றார்.[10]

1995 இல், டாண்டன் ஷாருக் கானுடன் முதல் முறையாக ஜமானா திவனா என்ற படத்தில் நடித்தார். படம் சரியாக வரவில்லை.[11] கிலாடியோன் கா கிலாடி (1996)[12] சன்னி தியோலுக்கு, ஜோடியாக ஜித்தி ( 1997) போன்ற வெற்றிப் படங்களின் மூலம் இவரது வாழ்க்கை மீண்டும் வெற்றிப் பாதையில் சென்றது. அந்த ஆண்டின் பெரு வெற்றிப் படமாக சலாகென் (1998) மாறியது.[13]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டாண்டன் 1995 ஆம் ஆண்டில் பூஜா மற்றும் சாயா என்ற இரண்டு சிறுமிகளை அவர்களின் 11 மற்றும் 8 வயதில் தத்தெடுத்தார்.[14] 90 களின் பிற்பகுதியில், டாண்டன் நடிகர் அக்‌சய் குமாரைக் காதலித்தார். மேலும் அவரை தனது காதலன் என அறிவித்திருந்தார். அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொடாலும், பின்னர் பிரிந்தனர்.[15][16]

டாண்டன் தனது ஸ்டம்ப்ட் (2003) திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது திரைப்பட விநியோகஸ்தர் அனில் ததானியுடன் காதல் கொள்ளத் தொடங்கினார். அவர்களின் நிச்சயதார்த்தம் 2003 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.[17] இவர் தடானியை 22 பிப்ரவரி 2004 அன்று இராசத்தானின் உதய்பூரில் உள்ள ஜாக் மந்திர் அரண்மனையில் பஞ்சாபி பாரம்பரியம் மற்றும் சிந்தி பாரம்பரியத்தின் படி திருமணம் செய்துகொண்டனர்.[18] டாண்டன் 2005 மார்ச்சில் ராஷா என்ற மகளைப் பெற்றெடுத்தார்.[19] 2008 யூலையில், ரன்பிரவர்தன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deb Roy, Lachmi (27 January 2023). "EXCLUSIVE | Raveena Tandon on Padma Shri honour and the success of SRK's Pathaan" (in en). Firstpost இம் மூலத்தில் இருந்து 22 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230522190717/https://www.firstpost.com/entertainment/raveena-tandon-on-the-padma-shri-honour-i-do-roles-that-suit-my-age-12057892.html/amp. 
  2. "Top Actresses". Box Office India. Archived from the original on 4 January 2012. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  3. Kumar, Anuj (21 December 2021). "'Aranyak' season one review: Raveena Tandon aces Netflix whodunit, aided by the fantastic writing". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231210102148/https://www.thehindu.com/entertainment/movies/aranyak-season-one-review-raveena-tandon-aces-netflix-whodunit-aided-by-the-fantastic-writing/article38003206.ece. 
  4. "Raveena Tandon's look as Ramika Sen in 'KGF 2' released". The News Minute. 26 October 2020 இம் மூலத்தில் இருந்து 21 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220321165420/https://www.thenewsminute.com/article/raveena-tandon-s-look-ramika-sen-kgf-2-released-136161. 
  5. "Raveena Tandon". Rediff.com. Archived from the original on 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  6. "Raveena Reveals Her True Age | Raveena Tandon| JioTalks". JioTalks. 16 May 2019. Archived from the original on 27 May 2022. பார்க்கப்பட்ட நாள் 27 May 2022 – via YouTube.
  7. "Modelling can't make anybody a successful actor, says Raveena Tandon in Indore" (in en). Hindustan Times. 3 November 2014 இம் மூலத்தில் இருந்து 26 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200326111222/https://www.hindustantimes.com/indore/modelling-can-t-make-anybody-a-successful-actor-says-raveena-tandon-in-indore/story-8h3WoDIDt5058j7hR08N7H.html. 
  8. "boxofficeindia.com". Archived from the original on 6 December 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2007.
  9. "1994 box office report". Archived from the original on 29 June 2007. பார்க்கப்பட்ட நாள் 12 September 2007.
  10. "Happy birthday Raveena Tandon: Her 5 top dance numbers that made her the mast-mast girl". Hindustan Times (in ஆங்கிலம்). 26 October 2019. Archived from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
  11. "1995 box office report". Archived from the original on 25 August 2007. பார்க்கப்பட்ட நாள் 12 September 2007.
  12. "KKK: A Hit". Archived from the original on 27 August 2007. பார்க்கப்பட்ட நாள் 12 September 2007.
  13. "Ziddi: A Hit". 1997 box office chart. Archived from the original on 24 August 2007. பார்க்கப்பட்ட நாள் 12 September 2007.
  14. "Raveena Tandon was scared to talk about her adopted daughters because she was unmarried". Outlook India. 27 January 2022. Archived from the original on 27 January 2022. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
  15. "Raveena Tandon says she is friends with Akshay Kumar: I think of him very highly". India Today. 19 May 2023. Archived from the original on 22 May 2023. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  16. "Raveena Tandon talks about her broken engagement with Akshay Kumar in viral video, says 'He wanted...'". News18 India. 13 May 2023. Archived from the original on 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
  17. Karishma Loynmoon. "Spouse Special: Anil Thadani on wife Raveena Tandon". Filmfare. Archived from the original on 15 July 2023. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  18. "Raveena Tandon's wedding will now be a movie". Rediff.com. 25 February 2004. Archived from the original on 9 September 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  19. "Raveena Tandon shares pics from her daughter's graduation dinner, fan calls Rasha 'Twin Tandon'". Mid Day. Archived from the original on 15 July 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீணா_டாண்டன்&oldid=4122886" இலிருந்து மீள்விக்கப்பட்டது