உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் விநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் விநாயகம்
இயற்பெயர்ராமசுப்பிரமணியம்
பிற பெயர்கள்ரமேஷ் விநாயகம்
பிறப்பு7 சூலை 1963 (1963-07-07) (அகவை 60)
இசை வடிவங்கள்கருநாடக இசை, திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைப்பதிவு தயாரிப்பாளர், இசைக் கருவி வாசிப்பவர், ஏற்பாட்டாளர், பாடகர், பாடலாசிரியர்
இசைத்துறையில்1986–தற்பொழுது வரை
இணையதளம்https://www.rameshvin.com/

ரமேஷ் விநாயகம் (பிறப்பு ஜூலை 7,1963) ஓர் இந்திய இசையமைப்பாளர், அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தமிழ் பெற்றோர்களான விநாயகம் மற்றும் வல்லிக்கு ரமேஷ் விநாயகம் ராமசுப்பிரமணியம் (ராம்சுப்பு) என்ற பெயரில் பிறந்தார்.[1] ஏ. எம். ஜெயின் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றார். ருக்மிணி ரமணி என்பவரிடமிருந்து கர்நாடக இசை, ஜேக்கப் ஜானிடம் மேற்கத்திய பாரம்பரிய இசை கற்ற இவர், லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்தார்.[1] சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ. எம். ஜெயின் கல்லூரியில் நுண்கலைச் செயலாளராகப் பணியாற்றினார். இவர் தனது கல்லூரியை முடிக்கும் நேரத்தில், தனது கவிஞர்-நண்பர் நாராயணனுடன் இணைந்து பல்வேறு சூழ்நிலைகளுக்கு பல பாடல்களை இயற்றியிருந்தார். இவர் தனது தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் ஒரு மேலாளராகச் சில காலம் பணி செய்தார். இசையிலேயே தனது பணி இருக்க வேண்டும் என்று என்னினார்.[2] எஸ். பி. பாலாசுப்பிரமணியம் இவர்களை ஒரு நண்பர் மூலமாக சந்தித்த பிறகு முழு நேர இசைப் பயணத்தை தொடர முடிவு செய்தார்.[2]

மற்ற வேலைகள்[தொகு]

ரமேஷ் விநாயகம் பல ஆண்டுகளாக "கமக பெட்டி" என்று அழைக்கப்படும் ஒரு வேலையில் பணியாற்றி வருகிறார். இது இந்திய பாரம்பரிய இசை ஒரு வகையான அலங்காரமான காமகத்தை பார்வைக்கு பிரதிநிதித்துவப்படுத்தவும் குறிக்கவும் ஒரு வழியாகும். கமகங்களின் குறிப்பு, பொதுவாக இந்திய இசை அமைப்பில் காணப்படவில்லை. மேலும் விநாயகத்தின் முயற்சி கர்நாடக இசையில் ஒரு திருப்புமுனையாகவும் புரட்சியாகவும் பார்க்கப்பட்டது.[3][4] இந்த கமகப்பெட்டி குறியீடுகளுக்கு காப்புரிமம் பெற்றுள்ளார்.[5]

இசையமைப்பு வரலாறு[தொகு]

இசையமைப்பாளராக[தொகு]

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1989 பைலா பச்சேசு தெலுங்கு
1991 மாஞ்சி ரோஜு தெலுங்கு
1995 அத்தை. தெலுங்கு
1999 ஸ்பீட் டான்சர் தெலுங்கு
2002 ஏய் நீ ரொம்பா அழகா இருக்கே தமிழ் இசையமைத்த 1 பாடல் "தொட்டு தொட்டு"
2002 பல்கலைக்கழகம் தமிழ்
2003 நள தமயந்தி தமிழ்
2004 அழகிய தீயே தமிழ்
2006 ஜெர்ரி தமிழ்
2012 சொல்லக்கதை தமிழ் ஒலிப்பதிவு வெளியீடு, படம் வெளியிடப்படவில்லை
2013 ஏ காம்மன் மேன் ஆங்கிலம்
2014 ராமானுஜன் ஆங்கிலம்/தமிழ்
2014 மொசகுட்டி தமிழ்
தொலைக்காட்சி
  • சிம்ரன் திரை (ஜெயா தொலைக்காட்சி)
  • கிரேசியின் விடாது சிரிப்பு (ஜெயா தொலைக்காட்சி)
  • ரோஜா கூட்டம் (விஜய் தொலைக்காட்சி)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ramesh Vinayakam". Tekexplore.info. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  2. 2.0 2.1 "In tune with change". தி இந்து. 2 July 2003. Archived from the original on 4 November 2003. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  3. Chitra Swaminathan (13 June 2011). "Life & Style / Money & Careers : Music, out of the box". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  4. "Ramesh Vinayakam unlocks the gamaka". The Times of India. 11 June 2011. Archived from the original on 18 April 2012. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  5. "Gamaka box notational system". பார்க்கப்பட்ட நாள் 2024-06-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_விநாயகம்&oldid=4026772" இலிருந்து மீள்விக்கப்பட்டது