உள்ளடக்கத்துக்குச் செல்

ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூலை 1978 (1978-07-06) (அகவை 46)
சேலம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அமிா்தா குமாரமங்கலம்
உறவுகள்மோகன் குமாரமங்கலம் (தாத்தா)
ப. சுப்பராயன் (கொள்ளுத் தாத்தா)
பிள்ளைகள்( 2 மகன்கள் ) இஷாந்த் குமாரமங்கலம் மற்றும் ருத்ரா குமாரமங்கலம்
பெற்றோர்ப. ரங்கராஜன் குமாரமங்கலம் - கிட்டி குமாரமங்கலம்
வாழிடம்சேலம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்http://www.mohankumaramangalam.in

ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் (ஆங்கிலம்: Rangarajan Mohan Kumaramangalam) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், தொழிற்பண்பாளர் காங்கிரஸ் பிரிவின் தலைவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் சென்னையில் வாழ்ந்த ப. ரங்கராஜன் குமாரமங்கலம் -கிட்டி குமாரமங்கலம் இணையரின் மகனாக 06 ஜூலை 1978 அன்று பிறந்தார். இவரின் தாத்தா மோகன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.இவரின் தந்தை வழி கொள்ளுத் தாத்தா ப. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.இவர் அமிா்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இஷாந்த் மற்றும் ருத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.[2][3][4][5] மேலும் அகில இந்திய தொழில் வல்லுநா் காங்கிரஸ் தென்னிந்திய தலைராகவும் உள்ளார். தற்போது 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Bahurani' from Lucknow charms Tamil Nadu voters - Times of India". The Times of India. Retrieved 2019-05-09.
  2. 100010509524078 (2019-02-17). "5 working presidents to oversee Congress functioning in State". dtNext.in (in ஆங்கிலம்). Archived from the original on 2019-02-24. Retrieved 2019-05-09. {{cite web}}: |last= has numeric name (help)
  3. "Banking on Kumaramangalam family legacy". https://www.thehindu.com/news/national/tamil-nadu/banking-on-kumaramangalam-family-legacy/article5816037.ece. 
  4. "I'm more than my surname: Mohan Kumaramangalam". https://timesofindia.indiatimes.com/news/Im-more-than-my-surname-Mohan-Kumaramangalam/articleshow/33048604.cms. 
  5. "அடுத்த அதிரடி.. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு துணைத் தலைவர் நியமனம்!". https://tamil.oneindia.com/news/chennai/mohan-kumaramangalam-becomes-congress-working-president-tamilnadu-340555.html. 
  6. நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. வாரிசுகளுக்கு வாய்ப்பு. நியூஸ் 18 தமிழ். 14 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  7. ஓமலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு. தினமணி நாளிதழ். 15 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  8. ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி. தினத்தந்தி நாளிதழ். 3 மே 2021.{{cite book}}: CS1 maint: year (link)