உள்ளடக்கத்துக்குச் செல்

யோசெமிட்டி தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 37°51′N 119°33′W / 37.850°N 119.550°W / 37.850; -119.550[1]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசெமிட்டி தேசியப் பூங்கா
யோசெமிட்டி பள்ளத்தாக்கின் மலையூடுக் காட்சி
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
அமைவிடம்துவொலும்னெ, மாரிபோசா, & மாதெரா மாவட்டங்கள், கலிபோர்னியா, ஐ.அ.
அருகாமை நகரம்மாரிபோசா, கலிபோர்னியா
ஆள்கூறுகள்37°51′N 119°33′W / 37.850°N 119.550°W / 37.850; -119.550[1]
பரப்பளவு748,036 ஏக்கர்கள் (3,027.19 km2)[2]
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1890 (1890-10-01)
வருகையாளர்கள்4,336,890 (in 2016)[3]
நிருவாக அமைப்புதேசியப் பூங்கா சேவை
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிஇயற்கை: vii, viii
உசாத்துணை308
பதிவு1984 (8-ஆம் அமர்வு)

யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, /jˈsɛmɪtɪ/, yoh-SEM-i-tee)[4] கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா.[5][6] ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2).[2] 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட யோசெமிட்டி உலகளவில் இங்குள்ள கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், மீப்பெரும் செகுவா மரவனங்கள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள், மற்றும் உயிரியற் பல்வகைமைக்காக அறியப்படுகின்றது.[7] கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர்காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[8]

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர்.[3] வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ2) பரப்பில் கழிக்கின்றனர்.[7] 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர்.[9] தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கிய பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோசெமிட்டி நல்கையில் ஒப்பமிட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.[10]

ஒளிப்படத் தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  2. 2.0 2.1 "Park Statistics". Yosemite National Park (U.S. National Park Service). பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
  3. 3.0 3.1 "Annual Park Recreation Visitation (1904 – Last Calendar Year)". U.S. National Park Service. பார்க்கப்பட்ட நாள் March 1, 2018.
  4. http://www.dictionary.com/browse/yosemite?s=t
  5. Harris 1998, ப. 324
  6. "Discover the High Sierra". California Office of Tourism.
  7. 7.0 7.1 "Nature & History". United States National Park Service: Yosemite National Park. October 13, 2006. Archived from the original on January 25, 2007. பார்க்கப்பட்ட நாள் January 27, 2007.
  8. "Yosemite Wilderness". United States National Park Service: Yosemite National Park. பார்க்கப்பட்ட நாள் March 15, 2008.
  9. "New visitation record in 2016 as over 5 million people visited Yosemite National Park". GoldRushCam.com. Sierra Sun Times. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  10. "History & Culture". United States National Park Service: Yosemite National Park. பார்க்கப்பட்ட நாள் January 27, 2007.