உள்ளடக்கத்துக்குச் செல்

யோசு இங்கிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசு இங்கிலிசு
Josh Inglis
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யோசுவா பாட்ரிக் இங்கிலிசு
பிறப்பு4 மார்ச்சு 1995 (1995-03-04) (அகவை 29)
லீட்சு, இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குஇலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 238)24 சூன் 2022 எ. இலங்கை
கடைசி ஒநாப20 அக்டோபர் 2023 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்48
இ20ப அறிமுகம் (தொப்பி 99)11 பெப்ரவரி 2022 எ. இலங்கை
கடைசி இ20ப3 செப்டம்பர் 2023 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்48
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–இன்றுமேற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி
2017/18–இன்றுபெர்த் ஸ்கோசேர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.ஒ.நா இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 11 12 52 39
ஓட்டங்கள் 219 265 2,466 1,223
மட்டையாட்ட சராசரி 19.90 26.50 32.88 33.05
100கள்/50கள் 0/2 0/0 4/12 1/10
அதியுயர் ஓட்டம் 58 48 153* 138
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/1 7/1 176/3 44/7
பதக்கத் தகவல்கள்
மூலம்: கிரிக்கின்ஃபோ, 21 அக்டோபர் 2023

யோசுவா பாட்ரிக்கு இங்கிலிசு (Joshua Patrick Inglis, பிறப்பு: 4 மார்ச் 1995) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலக்குக் காப்பாளராகவும், வலக்கை மட்டையாட்டத்திலும் விளையாடி வருகிறார்.[1]

யோசு இங்கிலிசு இங்கிலாந்தில் லீட்சு நகரில் பிறந்தார். தனது 14 -ஆவது அகவையில் குடும்பத்துடன் ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.[2] இவர் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் இடபிடித்தார். ஆனால் அவர் அச்சுற்றில் எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆத்திரேலிய அணிக்காக 2022 பெப்ரவரியில் முதலாவது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[3]

பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]

இங்கிலிசு தனது முதலாவது முதல்-தரப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2015 திசம்பரில் விளையாடினார்.[4] 2021 மார்ச்சில், இங்கிலாந்தின் லெசுட்டர்சயர் கவுண்டி துடுப்பாட்டக் கழக அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தார்.[5] 2021 சூனில், தனது முதலாவது இ20 சதத்தை (103 * செசுட்டர்சயர் அணிக்காகப் பெற்றார்.[6]

2021 ஆகத்தில், 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத்திற்கான ஆத்திரேலிய அணியில் இணைக்கப்பட்டார்.[7] 2022 சனவரியில், இலங்கைக்கு எதிரான ஆத்திரேலியாவின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்கப்பட்டார்.[8] தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் 2022 பெப்ரவரி 11 இல் இலங்கைக்கு எதிராக விளையாடினார்.[9] அதே மாதத்தில், பாக்கித்தான் அணிக்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[10] 2022 சூன் 22 இல், தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடினார்.[11] 2023 இல், ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Josh Inglis". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 December 2015.
  2. "Ashes: England-born Josh Inglis will not have split loyalties if picked by Australia". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  3. "Josh Inglis handed debut as Australia begin build-up to title defence". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  4. "West Indies tour of Australia, Tour Match: Cricket Australia XI v West Indians at Brisbane, Dec 2-5, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 December 2015.
  5. "Leicestershire add Josh Inglis to T20 Blast squad". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
  6. "Josh Inglis hundred sees Leicestershire claim first win of campaign". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  7. "Josh Inglis earns call-up and key names return in Australia's T20 World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  8. "Ben McDermott and Travis Head earn T20I call-ups for Sri Lanka series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
  9. "1st T20I (N), Sydney, Feb 11 2022, Sri Lanka tour of Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  10. "Australia's Test quicks and David Warner rested from Pakistan limited-overs matches". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
  11. "5th ODI (D/N), Colombo (RPS), June 24, 2022, Australia tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
  12. sport, Guardian (2023-09-06). "Big names included in Australia’s Cricket World Cup squad despite injury concerns" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/sport/2023/sep/06/cricket-world-cup-2023-australia-squad-announced-released-pat-cummins-mitchell-starc-glenn-maxwell. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசு_இங்கிலிசு&oldid=3986815" இலிருந்து மீள்விக்கப்பட்டது