யோகினி கோயில், ஜபல்பூர்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Chausath_Yogini.jpg/220px-Chausath_Yogini.jpg)
யோகினி கோயில் அல்லது 64 யோகினி கோயில் (Chausath Yogini Temple, Jabalpur) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை ஆற்றின் கரையில் அமைந்த பேதாகாட் எனும் கிராமாத்தில் உள்ள [1] சிறு குன்றின் உச்சியில் கட்டப்பட்டது.[2][3] இக்கோயில் சாக்த சமயத்தின் துர்கை மற்றும் 64 யோகினி தேவதைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.[4]
காலச்சூரி பேரரசர்களால் பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் இக்கோயில் கஜுராஹோ கட்டிட அமைப்பில் கட்டப்பட்டது.[5]
தில்லி சுல்தானகம் மற்றும் முகலாய ஆட்சியில் இக்கோயிலின் சிற்பங்கள் சிதைக்கப்பட்டது.[3]
கோயில் அமைப்பு[தொகு]
யோகினி கோயில் ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின் மீது 150 படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில் வளாகம் வட்ட வடிவ மதில் சுவர்களுடன் கூடியது. கோயில் கருவறையில் துர்கை அம்மனின் உருவச் சிலையும்; வட்ட வடிவ கோயில் மதில் சுவரில் 64 யோகினிகளின் சிற்பங்கள் உள்ளது. 64 யோகினி சிற்பங்களுக்கு நடுவில் நந்தி வாகனத்தில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது.[5]
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bhedaghat
- ↑ "Indian Temples and Iconography: Chaunsat yogini temple, Bheraghat Jabalpur". indiatemple.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 3.0 3.1 "Chausath Yogini Temple, Jabalpur: A Must Visit Heritage Site". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 4.0 4.1 "Chausat Yogini Temple - Jabalpur Directory - Chausat Yogini Temple -Jabalpur Online Guide - Madhya Pradesh (MP), India". jabalpurdirectory.com. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 5.0 5.1 5.2 "Chausath Yogini Temple, Jabalpur, India | Life is a Vacation". lifeisavacation.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
வெளி இணைப்புகள்[தொகு]