யோகான் வான் இலாமாண்ட்
யோகான் வான் இலாமாண்ட் Johann von Lamont | |
---|---|
யோகான் இலாமாண்ட், உருடோல்ஃப் ஆஃப்மனின் அச்சோவியம், 1856. | |
பிறப்பு | 13 திசம்பர் 1805 கொரீமுல்சீ |
இறப்பு | 6 ஆகத்து 1879 (அகவை 73) மூனிச், செருமனி |
தேசியம் | சுகாட்டியர் |
துறை | வானியல் இயற்பியல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பிலிப் கார்ல் |
அறியப்படுவது | புவிக் காந்தவியல் |
யோகான் வான் இலாமாண்ட் (Johann von Lamont) FRSE அல்லது ஜான் இலாமாண்ட் என அழைக்கப்படும் இவர்,[1] (13 திசம்பர் 1805 - 6 ஆகத்து 1879), ஒரு சுகாட்டிய-செருமனி வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]ஜான் இலாமாண்ட் (John Lamont) 1805 திசம்பர் 13 இல் சுகாட்லாந்தில் உள்ள அபர்டீன்சயரில் இன்வெரே பகுதிக்கு அருகில் அமைந்த கோரீமுல்சீயில் பிரந்தார். இவரது தந்தையார் இராபர்ட் இலாமாண்ட். இவரது தாயார் எஇலிசபத் ஏவான். இவர் பிரேமார் பக்கத்தில் அமைந்த இன்வெரே பள்ளியில் கல்வி பயின்றார். இவர் தந்தையார் 1817 இல் இறந்துவிட்டார் எனவே இவர் செருமனிக்கு, புனித ஜேம்சு துறவுமடத்தின் இரேட்டிசுபானில் உள்ள சுகாட்சு பெனெடிக்டைன் கல்லூரிக்கு, அனுப்பப்பட்டார்.[2] இவர் போகங்கவுசன் வான்காணகத்தில் சேர்ந்து வானியல் பணியைத் தொடங்கினார். 1835 இல் அதன் இயக்குநரானார். முனைவர் பட்ட்த்தை 1830 இல் முடித்து 1852 இல் மூனிச் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆனார்.[3] At the observatory he undertook the task of creating a star catalog that had about 35,000 entries.
இவரது சிறப்புப் புலம் புவியின் காந்தவியலாகும். இவர் புவியின் காந்த அளக்கைகளைப் பவாரியா, வடக்குச் செருமனி, பிரான்சு, சுபெயின், டென்மார்க் ஆகிய இடங்களில் மேற்கொண்டார். இவர் 1850 இல் காந்தப் பத்தாண்டு அலைவுநேரத்தையும் (பத்தாண்டு வட்டிப்பு புவிக்காண்டஹ்ப்புலத்தை உருவாக்கும் )புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்தார். இது ஓரளவு சூரியக் கரும்புள்ளி வட்டிப்பை ஒத்தமைந்தது. அதே ஆண்டில் என்றிச் சாமுவேல் சுவாபே சூரியனின் கரும்புள்ளிகளின் வட்டிப்பைக் கண்டறிந்தார்.
இவர் யுரேனசு, காரிக்கோள் ஆகியவற்றின் வட்டணைகளைக் கணக்கிட்டார்.யுரேனசின் பொருண்மையின் முதன்மதிப்பைக் கொணர்ந்தார். தற்செயலாக இவர் 1845 இல் ஒருமுறையும் 1846 இல் இருமுறையும் கண்ணுற்றுள்ளார். எனினும் அதை இவர் ஒரு புதிய கோளாக உய்த்துணரவில்லை.
இவர் Handbuch des Erdmagnetismus (1849) எனும்நூலின் ஆசிரியர் ஆவார்..
இவர் தனியராக, செருமனி மூனிச் நகரில் 1879 ஆகத்து 6 இல் இறந்தார். இவரது பெருஞ்செல்வம் அறிவியல் புலங்களில் ஆய்வு மேற்கொள்பவருக்கு நல்கையாகப் பயன்படுத்தப்பட்ட்து.[2]
தகைமைகள்
[தொகு]இவர் அரசு கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரும் எடிபர்கு அரசு கழக உறுப்பினரும் ஆவார்.இவர் 1867 இல் பவாரிய அரசரால் பவாரிய முடித்தகைமை ஆணை வழங்கப்பட்டார். இவர் இதன்வழி வான் எனும் முன்னடையைப் பயன்படுத்தலாம். மூனிச்சில் உள்ள இவரது சிலை திறந்த கையோடு வடிக்கப்பட்டுள்லது. இக்கையில் மக்கள் சிறு காசுகளை வைக்கின்றனர்.டீசைடு களக்குழு 1934 இல் சுகாட்லாந்தின் இன்வெரேவில் பளிங்கு நினைவு பேழையை நிறுவியது. இச்சிலை சர் ஜேம்சு ஜீன்சு அவர்களால் திறக்கப்பட்டது.[2]
பின்வரும் வான்பொருள்கள் இவர் பெயர் இடப்பட்டுள்ளன:
- இலாமாண்ட் (செவ்வாய்க் குழிப்பள்ளம்).
- இலாமாண்ட் (நிலாக் குழிப்பள்ளம்).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mozel, P. (December 1986). "In Search of Sprites - the Discovery of Ariel and Umbriel". Journal of the Royal Astronomical Society of Canada 80 (6). Bibcode: 1986JRASC..80..344M. http://adsabs.harvard.edu/full/1986JRASC..80..344M.
- ↑ 2.0 2.1 2.2 "Centenaries of 2005". Astronomical Society of Edinburgh Journal (49). October 2005. http://www.astronomyedinburgh.org/publications/journals/49/page3.shtml. பார்த்த நாள்: 2007-07-30.
- ↑ "Lamont, Johann von". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 16. (1911). Cambridge University Press.