யூரியா சுழற்சி
யூரியா சுழற்சி [Urea cycle] (அ) ஆர்னிதின் சுழற்சி என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சியாகும். யூரியா சுழற்சி கல்லீரலில் முதன்மையாகவும், சிறுநீரகத்தில் குறைவான அளவும் நடைபெறுகின்றது.
யூரியா சுழற்சி வினைகள் அட்டவணை மற்றும் வரைபடம்
[தொகு]மணியிழையத்தில் (மைட்டோகாண்டீரியா) இரண்டும், உயிரணுக்கணிகத்தில் (சைடோசால்) மூன்றுமாக ஐந்து வினைகளை யூரியா சுழற்சிக் கொண்டுள்ளது. இச்சுழற்சியில், இரண்டு அமினோ தொகுதிகள் (NH4+ - லிருந்து ஒன்று, அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து ஒன்று) மற்றும் ஒரு கார்பன் அணுவானது (HCO3− - லிருந்து) நச்சுத்தன்மையில்லாத யூரியா என்னும் கழிவுப் பொருளாக மாற்றப்படுகின்றது.
படி | வினைபொருட்கள் | விளைபொருட்கள் | வினையூக்கி | நடைபெறும் இடம் |
---|---|---|---|---|
1 | NH4+ + HCO3− + 2 [அடெனோசின் டிரைபாஸ்பேட்டு (ATP)] | கார்பமோயில் பாஸ்பேட்டு + 2 [அடெனோசின் டைபாஸ்பேட்டு(ADP)] + பாஸ்பேட்(Pi) | கார்பமோயில் பாஸ்பேட்டு இணைப்பி 1 (CPS1) | மணியிழையம் |
2 | கார்பமோயில் பாஸ்பேட்டு + ஆர்னிதின் | சிட்ருலின் + பாஸ்பேட்டு; Pi | ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி (OTC) | மணியிழையம் |
3 | சிட்ருலின் + அஸ்பார்டேட்டு + அடெனோசின் டிரைபாஸ்பேட்டு (ATP) | ஆர்ஜினினோ சக்சினேட்டு + அடெனோசின் மோனோபாஸ்பேட்டு (AMP) + பைரோபாஸ்பேட்டு (PPi) | ஆர்ஜினினோ சக்சினேட்டு தொகுப்பி (ASS) | உயிரணுக்கணிகம் |
4 | ஆர்ஜினினோ சக்சினேட்டு | ஆர்ஜினின் + ஃபியூமரேட்டு | ஆர்ஜினினோ சக்சினேட்டு சிதைப்பி (ASL) | உயிரணுக்கணிகம் |
5 | ஆர்ஜினின் + H2O | ஆர்னிதின் + யூரியா | ஆர்ஜினினேசு 1 (ARG1) | உயிரணுக்கணிகம் |
- யூரியா சுழற்சி வினைகள் வரைபடம்
1 L-ஆர்னிதின்
2 கார்பமோயில் பாஸ்பேட்டு
3 L-சிட்ருலின்
4 ஆர்ஜினினோ சக்சினேட்டு
5 ஃபியூமரேட்டு
6 L-ஆர்ஜினின்
7 யூரியா
L-Asp L: அஸ்பார்டேட்டு
கார்பமோயில் பாஸ்பேட் இணைப்பி 1 (CPS-1)
ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி (OTC)
ஆர்ஜினினோ சக்சினேட்டு தொகுப்பி (ASS)
ஆர்ஜினினோ சக்சினேட்டு சிதைப்பி (ASL)
ஆர்ஜினினேசு 1 (ARG1)
முதல் வினையில், NH4+ + HCO3− = NH3 + கரிவளி (CO2) + நீர் (H2O).
யூரியா சுழற்சியின் சமன்பாடுகள்
[தொகு]ஒட்டுமொத்தச் சமன்பாடு
NH3 + CO2 + அஸ்பார்டேட்டு + 3 [ATP] + 2 [H2O] → யூரியா + ஃபியூமரேட்டு + 2 [ADP] + 2 [Pi] + AMP + PPi
சுருக்கச் சமன்பாடு
2 NH3 + CO2 + 3 [ATP] + [H2O] → யூரியா + 2 [ADP] + 4 [(Pi] + AMP
யூரியா சுழற்சி சீர்கேடுகள்
[தொகு]- ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி குறைபாடு
- கார்பமோயில் பாஸ்பேட்டு இணைப்பி குறைபாடு
- ஆர்ஜினினோ சக்சினிக் அமிலச்சிறுநீர்
- இரத்தத்தில் ஆர்ஜினின் மிகைப்பு
- இரத்தத்தில் ஆர்னிதின் மற்றும் அமோனியா மிகைப்பு, ஹோமோசிட்ருலின்சிறுநீர் நோய்க் குறித்தொகுப்பு
- லைசின்சிறுநீர் புரதச் சகியாமை
- இரத்தத்தில் சிட்ருலின் மிகைப்பு
- N-அசெட்டைல் குளூடமேட் தொகுப்பி குறைபாடு
மேற்கண்ட பல சீர்கேடுகளும் இரத்தத்தில் அமோனியா மிகைப்புடன் தொடர்பு உடையவை.
கூடுதல் படங்கள்
[தொகு]-
யூரியா சுழற்சி
-
யூரியா சுழற்சி (வண்ணத்தில்)
யூரியா சுழற்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||