உள்ளடக்கத்துக்குச் செல்

யூசுப் சலீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூசுப் சலீம்
Yousaf Saleem
குடிமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 சூன் 2018

யூசுப் சலீம் (Yousaf Saleem) என்பவர் பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சட்ட நிபுணராவார். [1] பாக்கித்தானில் பார்வையற்ற முதல் நீதிபதி என்று அறியப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 26 ஆம் தேதியன்று இவர். பதவியேற்றார் [2] [3] சலீம் 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்புத் திட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். . 2017 ஆம் ஆண்டில் 6,500 பேர் எழுதிய நீதித்துறை தேர்வில் இவர் முதலிடம் பிடித்தார். நேர்காணல் செய்யப்பட்ட 21 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவரது இயலாமை காரணமாக நேர்காணலில் தோல்வியடைந்தார். பாக்கித்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் யூசுப் சலீம் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] பாக்கித்தான் அரசியலமைப்பின் படி, மாற்றுத்திறனாளிகளை நீதிபதியாக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாதது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது மேற்கோளிட்டுள்ளது. [6] [7]

யூசுப் சலீம் லாகூரைச் சேர்ந்தவர். ஒரு பட்டய கணக்காளரின் மகனாகப் பிறந்தார். தனது குடும்பத்தில் இளைய குழந்தையாக இருந்தார். இவருக்கு முன்னதாக குடும்பத்தில் நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். அவர்களில் இருவர் பார்வையற்றவர்கள். அவரது சகோதரி சைமா சலீம் பார்வையற்ற முதல் குடிமைப்பணி அலுவலர் ஆவார். [8] அவர் கின்னார்ட் கல்லூரியில் தங்கப் பதக்கமும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி தேர்வில் ஆறாவது இடத்தையும் பெற்றார். அவர் வெளிநாட்டு சேவைகளில் சேர்ந்தார். ஜெனீவா மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.திட்டங்களில் பணியாற்றினார்.[9] [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yousuf Saleem sworn in as Pakistan's first visually impaired judge". 26 June 2018.
  2. "Yousaf Saleem sworn in as Pakistan's first blind judge".
  3. "CJP takes notice of non-selection of blind lawyer as civil judge". 25 April 2018.
  4. "CJP takes notice of visually impaired lawyer's non-selection as civil judge by LHC". 24 April 2018.
  5. "Pakistan's first blind judge".
  6. "Pakistan set to appoint its first blind judge". 14 May 2018.
  7. "Yousaf Saleem becomes first visually impaired judge in Pakistan".
  8. "First blind judge of Pakistan ready to make history".
  9. "Blind man's dream to be judge gone dark".
  10. "Young Pakistani all set to become first visually impaired judge". 14 May 2018.

புற இணைப்புகள்[தொகு]


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_சலீம்&oldid=3752849" இலிருந்து மீள்விக்கப்பட்டது