உள்ளடக்கத்துக்குச் செல்

யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிமென்ட்ஸ்
Elements
1579இல் சர் என்ரியால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட எலிமென்ட்ஸ் நூலின் முகப்பு
நூலாசிரியர்யூக்ளிட், மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள்
மொழிபழங்கால கிரேக்கம், மொழிபெயர்ப்புகள்
பொருண்மையூக்ளீட் வடிவியல், elementary எண் கோட்பாடு
வகைகணிதம்
வெளியிடப்பட்ட நாள்
கி.மு. 300
பக்கங்கள்13 பாகங்கள்

எலிமென்ட்ஸ் ( பண்டைய கிரேக்கம் : Στοιχεῖα Stoicheia) என்பது ஒரு பண்டைய கணித மற்றும் வடிவவியல் நூலாகும். இதுவே கணிதத்தில் உலகில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது. இதை எழுதியவர் பண்டைய கிரேக்க கணித மேதையான யூக்ளிட் என்பவராவார். அவருக்கு முன்னாள் தோன்றிய கிரேக்க நாட்டுக் கணித மேதைகளின் படைப்புகளையும், தனது சொந்த கண்டுபிடிப்புகளான கணிதக் கருத்துகளையும் இணைத்து இதை வெளியிட்டார். இது 13 பாகங்களாக பழங்கால கிரேக்க மொழியில் கி.மு 300 இல் வெளியிடப்பட்டது. இதன் முதல் ஆறு தொகுப்புகளில் வடிவவியல் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளும், அடுத்த மூன்று தொகுப்புகளில் எண்ணியல் சார்ந்த சிந்தனைகளும், பத்தாம் தொகுப்பில் விகிதமுறா எண்களின் அமைப்பும், மீதி மூன்று தொகுப்புகளில் கனவடிவவியல் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்

[தொகு]