யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை
தோற்றம் | 1972 (recognised by UEFA since 1973) |
---|---|
மண்டலம் | ஐரோப்பா (யூஈஎஃப்ஏ) |
அணிகளின் எண்ணிக்கை | 2 |
தற்போதைய வாகையாளர் | Bayern Munich (1st title) |
இணையதளம் | Official Website |
2014 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை |
யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை (UEFA Super Cup) என்பது ஒவ்வொரு ஆண்டும் யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படும் போட்டியாகும்; இது அவ்வாண்டின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்படும். பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டிணைவுகள் ஆரம்பிக்கும் காலத்தில், ஆகத்து மாத இறுதியில், குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று நடத்தப்படும்.
1972-லிருந்து 1999-வரை ஐரோப்பியக் கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை/யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை வெற்றியாளருக்கும் இடையே இந்த உன்னதக் கோப்பைப் போட்டி நடத்தப்பட்டது. யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை - போட்டி நடத்துவது நிறுத்தப்பட்ட பிறகு, வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளருக்கும் இடையே உன்னதக் கோப்பை-போட்டி நடத்தப்பட்டது; 2009-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ கோப்பையானது யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று பெயர் மாற்றப்பட்டது.
தற்போதைய வெற்றியாளர்கள் செருமனியின் பேயர்ன் மியூனிச் அணியாகும். ஐரோப்பிய உன்னதக் கோப்பையை அதிகமுறை வென்றவர்கள் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இத்தாலியின் ஏசி மிலான் அணியாகும்.