யுரேனியம் போரைடு
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
12007-36-2 ![]() | |
பண்புகள் | |
UB2 | |
வாய்ப்பாட்டு எடை | 259.651 கி/மோல் |
அடர்த்தி | 12.7 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,430 °C (4,410 °F; 2,700 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம் போரைடு (Uranium boride) என்பது UB2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] யுரேனியம் மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அதிகமான நிலைப்புத்தன்மையும், நீரில் கரையும் தன்மையற்றும் கண்ணாடியன்ன போரைடாகவும் காணப்படுகிறது.
யுரேனியம் அடிப்படையிலான கதிரியக்கக் கழிவுகளைச் செயல்நீக்கம் செய்யவும் மற்றும் நீண்ட காலத்திற்கு அதைப் பாதுகாப்பாகச் சேமித்து ஆக்கமுறையில் பயன்படுத்தவும் சரியான ஒரு முறை ஆராயப்பட்டு வருகிறது. கதிரியக்கச் சிகிச்சையின் ஒரு வகையான அண்மை சிகிச்சையில் இச்சேர்மம் சில பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. சிகிச்சைத் தளத்தின் மீது நேரடியாக கதிரியக்க நுண்கோளத்தைப் பதித்தும், சிகிச்சைத் தளத்திற்கு பாதிப்பு ஏதுமின்றி மேலும் காலநீட்டிப்புச் செய்து அங்கேயே வைத்திருக்கவும் இவ்வகையானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uranium Diboride". Retrieved நவம்பர் 7, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- US53,42,283 (1994-08-30) Roger R. Good, Endocurietherapy.
- Franzen, Harald (6 April 2001). "Cheap, Safe Storage for Radioactive Materials". Scientific American. Archived from the original on 14 அக்டோபர் 2007. Retrieved 21 November 2011.