யுன் சி - கோ
யுன் சி-கோ (ஆங்கிலம்: Yun Chi-ho ) ( 1864 - 1945) 1800 களின் பிற்பகுதியிலும் 1900 களின் முற்பகுதியிலும் ஜோசான் கொரியாவில் ஒரு முக்கியமான அரசியல் ஆர்வலர் மற்றும் சிந்தனையாளராக இருந்தார். இவரது இயற்பெயர் "ஜ்வா-ஓங்",[1] அவரது மரியாதைக்குரிய பெயர் சுங்கியம் என்பதாகும். சீயோ ஜெய்-பில் தலைமையிலான , மக்கள் கூட்டுக் கழகம் மற்றும் சின்மின்வே போன்ற சீர்திருத்த அமைப்புகளின் முக்கிய உறுப்பினராக யூன் இருந்தார். அவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு வலுவான தேசியவாதியாக இருந்தார். சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு ஜோசான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.[2] அவர் பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார் மற்றும் கொரியாவில் கிறித்துவத்தின் வலுவான ஆதரவாளராக இருந்தார்.[3]
யூனின் ஆரம்ப ஆண்டுகளில் தேசபக்தி மற்றும் தேசியவாத இயக்கங்களின் வலுவான ஆதரவு நிறைந்திருந்தாலும், கொரியாவில் சப்பானிய ஆதிக்கத்தை அடுத்து, கொரிய சுதந்திரத்திற்கான யூனின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது, 1904 இல் கொரியா சப்பானின் பாதுகாவலராகத் தொடங்கி, பின்னர் 1910 இல் சப்பானிய சாம்ராச்சியத்தில் முழுமையாக இணைக்கப்பட்டது. கொரிய சுதந்திரம் குறித்த அணுகுமுறையில் யூனின் வெளிப்படையான மாற்றம் மற்றும் 1919 ஆம் ஆண்டு சமில் இயக்கம் போன்ற தேசியவாத இயக்கங்களுக்கு அவர் ஆதரவு இல்லாததால், இன்று பல கொரியர்கள் அவரை சப்பானியர்களுடன் ஒத்துழைப்பவராக பார்க்கிறார்கள்.[4]
யுன் சி-ஹோ கொரியாவின் முக்கிய யாங்பான் குடும்பங்களில் ஒருவராக இருந்தார்.[5] ஜோசான் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய தளபதி யுன் உங்-நியோலின் மகன் ஆவார்.[6] சோர்சியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்திற்கு பயில்வதற்கு முன்பு டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.[7] அவர் கொரிய இளைஞர்களின் கிறித்துவ சங்கத்தின் (ஒய்.எம்.சி.ஏ) ஆரம்ப தலைவராகவும், தென் கொரிய மெதடிசடாகவும் இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]யுன் சி-ஹோ 1864 டிசம்பர் 26, 1864 அன்று சுங்சியோங் மாகாணத்தின் அசனில் உள்ள தன்போ-மியோனில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை, யுன் உங்-யியோல், ஜோசான் அரசாங்கத்தில் ஒரு அதிகாரியாக இருந்தார். யுன் சி-கோ உள்ளூர் சியோடாங்கில் கன்பூசிய பாரம்பரியம் பற்றிய தனது ஆய்வில் சிறந்து விளங்கினார், மேலும் பன்னிரெண்டாவது வயதில் குடிமைப்பணிக் தேர்வெழுதினார்.[2] யூனின் குடும்பம் ஜோசோன் வம்சத்தின் மிகச் சிறந்த உன்னத குடும்பங்களில் ஒன்றாகும். 1871 முதல் 1878 வரை, யுன் சாங்கின் தனியார் கிராமப் பள்ளியில் கன்பூசியனிசத்தைப் படித்தார்.
மொழி பெயர்ப்பாளர்
[தொகு]யுன் தனது வாழ்நாள் முழுவதும் பல முக்கியமான அரசாங்க பதவிகளில் பணியாற்றினார். கொரியாவின் முதல் அமெரிக்க வெளியுறவு மந்திரி இலூசியஸ் புட்டேவின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார் .[2]
கொரிய சுதந்திர இயக்கங்கள்
[தொகு]யுன் வெளிநாடுகளில் இருந்து கொரியாவுக்கு திரும்பி வந்தபோது, கொரியாவில் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிய சிறிய அறிஞர்கள் இருந்தனர். அத்தகைய ஒரு குழுதான் யுன் பங்கேற்கத் தொடங்கிய சுதந்திரக் கழகம்.[8]
இறப்பு
[தொகு]1945 ஆம் ஆண்டில், அவர் சப்பானின் அங்கத்தினர் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் சப்பான் சரணடைதலால் சப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து கொரியா சுதந்திரம் அடைந்தது, சப்பானிய காலனித்துவ ஆட்சியின் பிற்பகுதியில், அவரது சப்பானிய ஒத்துழைப்பு காரணமாக குறிப்பிடப்படாத சில மக்களால் விமர்சிக்கப்பட்டார் .
1945 டிசம்பர் மாதம் கேசாங்கில் உள்ள கோரியேசியாங்கில் அவரது எண்பதாவது வயதில் இறந்தார் (இதை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.) [ மேற்கோள் தேவை ] 1960 இல் தென் கொரியாவின் அதிபராக இருந்த யுன் போ-சீயோனின் மாமாவும், முதல் கொரிய நோயியல் நிபுணரும் உடற்கூறியல் நிபுணருமான யுன் இல்-சீயோன் என்பவர்தான் யுன் சி-ஹோ.
குறிப்புகள்
[தொகு]- ↑ Korean spelling for Sitdown is old man
- ↑ 2.0 2.1 2.2 Clark, Donald N. Yun Ch'i-ho (1864-1945): “Portrait of a Korean Intellectual in an Era of Transition”. Source: Occasional Papers on Korea, No. 4 (September 1975),pp 37-42, 46-50, 54-56, 57, 58
- ↑ Chandra, Vipan. “Imperialism, Resistance, and Reform in Late Nineteenth-Century Korea: Enlightenment and the Independence Club”. (1988) Regents of the University of California
- ↑ Caprio, Mark (2007). "Loyal Patriot? Traitorous Collaborator? The Yun Ch'iho Diaries and the Question of National Loyalty." Journal of Colonialism and Colonial History, Volume 7, Number 3.
- ↑ "100 Koreans Freed; But Baron Yun Chi-ho and Other Prominent Men Are Found Guilty," New York Times. March 21, 1913.
- ↑ "Changing Sides," National Geographic. July 2003.
- ↑ Loftus, Mary J. "A Search for Truth; Yun Chi-Ho's Legacy is Rediscovered by his Great-granddaughter," பரணிடப்பட்டது சூலை 18, 2011 at the வந்தவழி இயந்திரம் Emory Magazine, Vol 80, No. 1, Spring 2004.
- ↑ Neff, Robert D. “Korea through Western Eyes”. (2009) Seoul National University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-521-1003-9 pp 137