உள்ளடக்கத்துக்குச் செல்

யுகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகேந்திரன்
பிறப்புயுகேந்திரன் வாசுதேவன் நாயர்
20 திசம்பர் 1976 (1976-12-20) (அகவை 48)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1987-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Hayma Malini

யுகேந்திரன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[1].[2] மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத் துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இசைப்பயணம்

[தொகு]

சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.

திரைப்பயணம்

[தொகு]

இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2001 பூவெல்லாம் உன் வாசம் கர்ணா தமிழ்
2002 யூத் பிரதாப் தமிழ்
பகவதி ஆனந்த் தமிழ்
2003 ஸ்டூடண்ட் நம்பர் 1 சத்யா தமிழ்
கையோடு கை தமிழ்
அன்பே அன்பே சிவா தமிழ்
2004 ஒரு முறை சொல்லிவிடு தமிழ்
மதுர ஜீவன் தமிழ்
2005 திருப்பாச்சி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தமிழ்
உள்ளக்காதல் தமிழ்
அலையடிக்குது தமிழ்
2007 முதல் கனவே டேவிட் தமிழ்
2008 னெஞ்சத்தைக் கிள்ளாதே மெய்யப்பன் தமிழ்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ராஜு தமிழ்
பச்சை நிறமே தமிழ்
2009 ராஜாதி ராஜா தமிழ்
நியூட்டனின் மூன்றாம் விதி தேவா தமிழ்
2011 யுத்தம் செய் இன்பா தமிழ்
2012 காதலானேன் தமிழ்
காதல் சாம்ராஜ்ஜியம் தமிழ் நிலுவையில்

பாடகராக

[தொகு]
பாடலின் பெயர் இசைக்கோவை இணைப் பாடகர்கள் இசை
ஏ சம்பா ஏ சம்பா பாண்டவர் பூமி சுபா, மஹாராஜன் பரத்வாஜ்
ஆடி ஆடி வாம்மா இந்திரன் சிறீவர்தினி மணி சர்மா
அடிடா கோவா சரண் யுவன் சங்கர் ராஜா
ஆட்டோகிராப் ஐ லவ் யூ டா ஷாலினி பரத்வாஜ்
கரோலினா காதல் சடுகுடு கார்த்திக் தேவா
செர்ரி செர்ரி லவ் சேனல் அனுராதா சிறீராம் தேவா
என்ன பார்க்கிறாய் தவமாய் தவமிருந்து சுசித்ரா சபேஷ் முரளி
கல்யாணம்தான் கட்டிகிட்டு சாமி கே கே, சிறீலேகா பார்த்தசாரதி ஹாரிஸ் ஜெயராஜ்
கிழக்கே பார்த்தேன் ஆட்டோகிராப் பரத்வாஜ்
கோடைமலை மேல வச்சு கண்ணன் வருவான் சரண், சித்ரா சிற்பி
கோழி வந்ததா ஆஹா அனுராதா சிறீராம், மலேசியா வாசுதேவன், சுஜாதா மோஹன் தேவன்
மெக்கி மெக்கி காதல் திருடா அனுராதா சிறீராம் பரணி
முல்லைப் பூ காதல் சாம்ராஜ்ஜியம் சரண், வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா
முதல் முதலாய் லேசா லேசா மதுமிதா, திப்பு ஹாரிஸ் ஜெயராஜ்
நெஞ்சத்தைக் கிள்ளாதே நெஞ்சத்தைக் கிள்ளாதே பிரஷாந்தினி பிரேம்ஜி அமரன்
ஒ ஷல்லல்லா ஜமாய் ஜூனியர் சீனியர் பிரேம், யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா
ஓ.. மரியா காதலர் தினம் தேவன், பெபி மணி ஏ. ஆர். ரகுமான்
ஒரு மாதிரி கீ மோ பிரசாந்தினி இளங்கோ கலைவாணன்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன் ரேஷ்மி பரத்வாஜ்
பார்த்தே பார்த்தே ரிலாக்ஸ் குழுவினர் தேவா
பிகாசோ ஓவியம் ராயல் பேமிலி பிரசாத் பரணி
பொட்டல்ல காதிலே காதல் ஜாதி யுவன் சங்கர் ராஜா இளையராஜா
ரோசாப்பூ உதட்டுல தமிழ் அனுராதா சிறீராம் பரத்வாஜ்
சுடும்வரை நெருப்பு ஜனனம் பாலாஜி, கார்த்திக், டிம்மி, திப்பு பரத்வாஜ்
சுத்துதே சுத்துதே நேபாளி விஜய் சிறீகாந்து தேவா
பொள்லாச்சி சந்தையிலே ரோஜாவனம் பரத்வாஜ்
விளக்குவொன்னு திரிய பார்க்குது தேவதையைக் கண்டேன் மாலதி தேவா

இசை இயக்குநராக

[தொகு]
ஆண்டு படம் மொழி குறிப்பு
2007 வீரமும் ஈரமும் தமிழ்
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே தமிழ் ஒரு பாடல் மட்டும்
2009 பலம் தமிழ்
2011 நெல்லை சந்திப்பு தமிழ்
2012 காதலானேன் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Find Tamil Actor Yugendran Filmography, Movies, Pictures and Videos". Jointscene.com. Retrieved 2011-12-03.
  2. "யுகேந்திரன் - பிரபலமான இசையமைப்பாளர் - Tamil Movie News". IndiaGlitz. Retrieved 2011-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகேந்திரன்&oldid=4191396" இலிருந்து மீள்விக்கப்பட்டது