உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணச் சமர் (1995)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணச் சமர் (1995)
ஈழப் போர் பகுதி
நாள் அக்டோபர் 17 - திசம்பர் 5, 1995
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
இலங்கை படை வெற்றி
பிரிவினர்
இலங்கைப் படைத்துறை தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மேஜர் ஜெனரல் (பின்னர் ஜெனரல்) ரொகான் தலுவத்த,
படைப்பகுதித் தலைவர் (பின்னர் மேஜர் ஜெனரல்) ஜானக பெரேரா
பலம்
10,000 தெரியவில்லை
இழப்புகள்
500 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை அரசின் கூற்றின்படி)[1] தெரியவில்லை[1]

1995 யாழ்ப்பாணச் சமர் (Battle of Jaffna (1995) என்பது 1995 அக்டோபர் முதல் திசம்பர் வரை யாழ்ப்பாணம் நகரத்திற்காக நடந்த ஒரு சமராகும்.[2]

சமர்

[தொகு]

யாழ்ப்பாண நகரம் பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான கோட்டையாக இருந்து வந்தது. புலிகள் இந்த நகரத்தை தமது புதிய சுதந்திர தேசத்தின் தலைநகராகக் கருதினர். இந்த நகரம் 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தால் பூமாலை நடவடிக்கையால் கொஞ்சகாலம் கைப்பற்றப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அந்த நகரம் மீண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

புலிகள் இலங்கை கடற்படையின் பீரங்கிப் படகுகளைத் தாக்கி அழித்தனர். மேலும் யாழ்ப்பாணம் மீது பறந்த இலங்கை விமானப்படையின் ஏவிஆர்ஓ வானூர்திகளை விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டு வீழ்த்தினர். இச்சமயத்தில் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுக்கள் முறிந்ததையடுத்து, இலங்கையின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி, சந்திரிகா குமாரதுங்க, யாழ்ப்பாணத்தின் மீதான இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார் இதையடுத்து மூன்றாம் ஈழப்போர் துவங்கியது. குடாநாட்டை கட்டுப்படுத்த பலாலி விமானத்தளம் இன்றியமையாததாக ஆனது.

1995, அக்டோபர், 17 இல், இலங்கை இராணுவத்தினர் 10,000 பேர் யாழ்ப்பாண நகரத்திற்கு (25 மைல் தொலைவில்) தங்கள் போர்த் தொடரைத் துவக்கினர். இந்தத் தாக்குதல் 1995, திசம்பர் 5, வரை நீடித்தது. இந்த 50 நாள் போரில் 300 வரையிலான இலங்கை இராணுவ வீரர்களும், 550 இக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவம் புலிகளிடமிருந்து நகரத்தையும் குடாநாட்டையும் கைப்பற்றியது. இதனால் புலிகள் முடக்கப்பட்டனர், என்றாலும் பெரும்பாலான புலிப் படையினர் காட்டுக்குள் பின்வாங்கினர்.[3]

பின்விளைவுகள்

[தொகு]

யாழ்ப்பாணத்துக்கான யுத்தம் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், புலிகளால் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய யுத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் இராணுவம் துவக்கத்தில் தெரிவித்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்ததாக நம்பப்பட்டது. எவ்வாறாயினும், திசம்பர் 23 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவப் பிரிவு ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 33 படையினர் கொல்லப்பட்ட போது போர் முடிவுக்கு வரவில்லை என்பது உறுதியானது. இதில் 30க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஏழு மாதங்களில் புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைத்தனர். 1996 யூலையில் போராளிகள் முல்லைத்தீவில் உள்ள படைத்தளத்தின் மீது ஓயாத அலைகள் நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 1,200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் இராணுவ தளமும் அழிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணச்_சமர்_(1995)&oldid=4048766" இலிருந்து மீள்விக்கப்பட்டது