உள்ளடக்கத்துக்குச் செல்

யாகியா சின்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாகியா சின்வார்
يحيى السنوار
2011ல் யாகியா சின்வார்
தலைவர், அமாசு அரசியல் குழு
பதவியில்
6 ஆகஸ்டு 2024 – 16 அக்டோபர் 2024
Deputyகலீல் அல்-ஐய்யா
முன்னையவர்இசுமாயில் அனியே
காசாவின் அமாசு அரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர்1962
கான் யூனிசு, காசா
இறப்பு16 அக்டோபர் 2024
தேசியம்பாலத்தீனர்
அரசியல் கட்சிஅமாசு
துணைவர்
சமர் முகமது அபு சாமர் (தி. 2011)
பிள்ளைகள்3
வாழிடம்கான் யூனிசு[1]
கல்விகாசா இசுலாமியப் பல்கலைக்கழகம்

யாகியா இப்ராகிம் சின்வார் (Yahya Ibrahim Hassan Sinwar)[2] (:29 அக்டோபர் 1962 -16 அக்டோபர் 2024) என்பவர் இசுமாயில் அனியே கொல்லப்பட்டப் பின்னர் காசாக்கரையில் உள்ள பாலஸ்தீன அரசியல் குழு மற்றும் அமாசு இயக்கத் தலைவராக 6 ஆகஸ்டு 2024 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3][4][5]

இளமை

[தொகு]

காசா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிசு அகதிகள் முகாமில் பிறந்த சின்வார், அபு இப்ராகிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள்.

1948 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இசுரேல் என்ற நாடு உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இசுரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதான போது அமாசின் நிறுவனர் சேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார். சிறையில் அவருடன் நெருக்கம் அடைந்தார் என்றும் அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது என்றும் டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் தெரிவித்தார்.

அமாசு 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஞ்யை நிறுவினார்.

1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இசுரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டு காசா பகுதியில் உள்ள அமாசின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்வார், 2017-ஆம் ஆண்டு அவர் அதன் தலைவராக பொறுப்பேற்றார். [6]

சின்வாரின் சிறை நாட்கள்

[தொகு]

யாகியா சின்வார் தனது இளம் பருவத்தில் 1988-2011 வரையில் 22 ஆண்டுகள இசுரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். சிறையில் அவர் அமாசு அமைப்பில் ஊக்கம் பெற்றார்.[7] சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இசுரேலால் கைது செய்யப்பட்டார். 1988 கைது செய்யப்பட்டு 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இசுரேல் நீதிமன்றத்தால் நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டின் படி இசுரேலிய பணயக்கைதியான இசுரேலிய ராணுவ வீரர் கிலாட் சாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து 1,027 பாலத்தீனர்களும் இஸ்ரேலிய அரேபிய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர், விடுவிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

2023 இசுரேல் மீதான அமாசின் தாக்குதல்கள்

[தொகு]

2023 இசுரேல் மீதான அமாசின் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் யாகியா சின்வார் என இசுரேல் குற்றம் சாட்டியது.

இறப்பு

[தொகு]

16 அக்டோபர் 2024 அன்று யாகியா சின்வார், இசுரேலிய பாதுகாப்புப் படைகளால் தெற்கு காசாக்கரையில் வைத்துக் கொல்லப்பட்டார்.[8][9]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sabbagh, Dan (26 November 2023). "IDF messaging suggests Gaza truce unlikely to last much beyond Tuesday". The Guardian இம் மூலத்தில் இருந்து 20 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240520114717/https://www.theguardian.com/world/2023/nov/26/idf-messaging-suggests-gaza-truce-unlikely-to-last-much-beyond-tuesday. 
  2. "Israel air strikes kill 42 Palestinians, rockets fired from Gaza". Reuters. 15 May 2021. Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
  3. "Hamas names Yahya Sinwar as new leader after Ismail Haniyeh's killing". Al Jazeera (in ஆங்கிலம்). Archived from the original on 6 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
  4. Beaumont, Peter (13 February 2017). "Hamas elects hardliner Yahya Sinwar as its Gaza Strip chief". The Guardian இம் மூலத்தில் இருந்து 13 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170213150750/https://www.theguardian.com/world/2017/feb/13/hamas-elects-hardliner-yahya-sinwar-as-its-gaza-strip-chief. 
  5. Balousha, Hazam; Booth, William (13 February 2017). "Hamas names hard-liner as its new political leader in Gaza". The Washington Post இம் மூலத்தில் இருந்து 15 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215201209/https://www.washingtonpost.com/world/middle_east/hamas-names-hard-liner-as-its-new-political-leader-in-gaza-/2017/02/13/b4e31518-f1f6-11e6-9fb1-2d8f3fc9c0ed_story.html. 
  6. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொல்ல இஸ்ரேல் நடத்திய ஒரு வருட தேடுதல் வேட்டை
  7. யாஹ்யா சின்வார்: ஹமாஸ் அமைப்பினரே அஞ்சி நடுங்கும் அளவுக்கு இவர் என்ன செய்தார்?
  8. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்து, கொலை செய்தது எப்படி
  9. Yahya Sinwar, leader of Hamas, killed by Israeli forces
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகியா_சின்வார்&oldid=4136851" இலிருந்து மீள்விக்கப்பட்டது