உள்ளடக்கத்துக்குச் செல்

ம. வே. பசுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. வே. பசுபதி
பிறப்பும. வே. பசுபதி
(1942-08-21)21 ஆகத்து 1942
திருப்பனந்தாள், கும்பகோணம், தமிழ்நாடு
இறப்புசனவரி 31, 2022(2022-01-31) (அகவை 79)
சென்னை, வில்லிவாக்கம்
தேசியம்தமிழர்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுதமிழறிஞர், எழுத்தாளர்
பெற்றோர்கா. ம. வேங்கடராமையா, அன்னபூரணி அம்மாள்

ம. வே. பசுபதி (Ma.Ve.Pasupathi, 21 ஆகத்து 1942 – 31 சனவரி 2022) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள் எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கா. ம. வேங்கடராமையா, அன்னபூரணி அம்மாள் திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம், முதுகலைப் பட்டம் படித்து, அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் சென்னை, பெசண்ட் நகரிலுள்ள உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது. இவர் பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று இதுவரைக்கும் 50இக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார். கம்பன் கதை எனும் நூலினையும் எழுதியவர்.

விருது

[தொகு]

இவர் தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான உ. வே. சா. விருது பெற்றிருக்கிறார்.[1]

மறைவு

[தொகு]

இவர் 2022 சனவரி 31 அன்று உடல்நலக் குறைவால் சென்னை வில்லிவாக்கத்தில் இயற்கை எய்தினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._வே._பசுபதி&oldid=3691638" இலிருந்து மீள்விக்கப்பட்டது