உள்ளடக்கத்துக்குச் செல்

மௌஸா அல் மல்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌஸா அல் மல்கி
தேசியம்கத்தார்
அறியப்படுவதுவளைகுடா நாடுகளில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்

மௌஸா அல் மல்கி ( அரபு மொழி: موزة المالكي‎ ) ( மொசா அல்-மல்கி என்றும் அழைக்கப்படுகிறது) ஓர் கத்தார் எழுத்தாளர் மற்றும் உளவியலாளர். [1]

1999 ஆம் ஆண்டில், வளைகுடா நாடுகளில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். [2] இவர் கத்தார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் அரபு பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒரு குழுவாக பரிந்துரைக்கப்பட்ட 1000 பெண்களில் இவர் பெயரையும் ரூத்-கேபி வெர்மோட்-மங்கோல்ட், என்ற சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைத்தார். [3]

அமெரிக்காவில் தனது பட்டங்களைப் பெற்ற இவர் கத்தார் நாட்டின் முதல் மனநல மருத்துவ நிபுணர் ஆவார். அரபு பெண் எழுத்தாளர்களால் இயற்றப்பட்ட பல இலக்கியப் படைப்புகளைத் தொகுத்து 2014 ஆம் ஆண்டில் "வாக்குறுதியளிக்கும் எழுத்தாளர்கள்" என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Moza Al-Malki | The First Forum of Asian Writers".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Habib Toumi (10 April 2011). "Women candidates to test their luck in Qatar polls". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
  3. Barbara Bibbo' (4 July 2005). "Qatari writer among nominees for prize". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  4. "Dr Moza Al Malki's book released". The Peninsula Qatar. 21 November 2014. Archived from the original on 14 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌஸா_அல்_மல்கி&oldid=3431549" இலிருந்து மீள்விக்கப்பட்டது