மோண்ட் முறை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/Nickel_kugeln.jpg/220px-Nickel_kugeln.jpg)
மோண்ட் முறை (Mond process அல்லது carbonyl process) என்பது தூய்மையற்ற கலப்பு நிக்கல் கூட்டுப் பொருட்களிலிருந்து கார்பனோரொக்சைடை (CO) பயன்படுத்தி தூய நிக்கலைப் பிரி்க்கும் வேதியியல் செயல்முறையாகும். இம்முறையை லுட்விக் மோண்ட் என்பவர் 1890 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[1]
கார்பனோரொக்சைட்டு நிக்கலுடன் இயல்பாகவே வினைப்பட்டு நிக்கல் கார்பொனைல் ஆக வளிம நிலையில் கிடைக்கிறது. நிக்கலின் இந்த இயல்பே மொண்ட் முறையில் பயன்படுத்தப்படுகிறது.
மோண்ட் முறையில் மூன்று படிமுறைகள் உள்ளன:
1. நிக்கல் ஒக்சைடு செயற்கை வளிமத்துடன் (syngas) 200 °செ வெப்பநிலையில் தாக்கமடைந்து ஒக்சிசனை வெளியேற்றி, தூய்மையற்ற நிக்கலைத் தருகிறது. இதனுடன் இரும்பு, கோபால்ட் போன்ற மாசுக்கள் கலந்துள்ளன.
- NiO (s) + H2 (g) → Ni (s) + H2O (g)
2. இந்த தூய்மையற்ற நிக்கல் மேலதிக கார்பனோரொக்சைட்டுடன் 50–60 °C இல் தாக்கமடைந்து நிக்க கார்பனைல் கிடைக்கிறது. மாசுக்கள் திடப்பொருட்களாக வெளியேறுகின்றன.
- Ni (s) + 4 CO (g) → Ni(CO)4 (g)
3. மேலதிக கார்பனோரொக்சைட்டு மற்றும் நிக்கல் கார்பனைல் கலவை 220–250 °செ இற்கு வெப்பமாக்கப்படும் போது, நிக்கல் டெட்ராகார்பனைல் பிரிவடைந்து நிக்கலாகப் பெறப்படுகிறது:
- Ni(CO)4 (g) → Ni (s) + 4 CO (g)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mond, L.; Langer, C.; Quincke, F. (1890). "Action of Carbon Monoxide on Nickel". Journal of the Chemical Society, Transactions 57: 749–753. doi:10.1039/CT8905700749. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society-transactions_1890_57/page/749.
- A dictionary of science - ELBS
- "Nickel: The Essentials". WebElements.
- "Nickel Chemistry". University of the West Indies (Mona).