உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன்ராவ் கல்லியன் புர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோகன்ராவ் சங்கர்ராவ் கல்லியன் புர்கர் ( Mohanrao Kallianpurkar) (12 ஆகத்து 1913 - 1 திசம்பர் 1985) இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கதக் நடனக் கலைஞரும் ஆசிரியருமாவார். இவர், கதக் நடன வடிவத்தின் சிறந்த அறிஞர்களாகவும் ஆசிரியராகவும் கருதப்பட்டார். இவர் கதக்கின் ஜெய்ப்பூர் பள்ளியைச் சேர்ந்தவர். [1]

சுயசரிதை

[தொகு]

கல்லியன் புர்கர் 1913 ஆகத்து 12 அன்று கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். [2]

சுந்தர் பிரசாத், அச்சன் மகாராஜ், மற்றும் சம்பு மகாராஜ் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார். 1937 இல் மும்பையில் கதக் நடன அகாடமி அமைக்க சுந்தர் பிரசாத்துக்கு உதவினார். 1939 ஆம் ஆண்டில், லக்னோவில் உள்ள மாரிசு இசைக் கல்லூரியிலும், பின்னர் பட்கண்டே இசை நிறுவனத்திலும் கதக் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து 1967 இல் ஓய்வு பெற்றார். இவர் சாகுந்தலம், மேகதூதம், போர் மற்றும் அமைதி, விக்கிரமோவர்சியம் மற்றும் மாலதி மாதவ் போன்ற பாலேக்களை நடனமாடி வழங்கினார். இவரது முக்கிய மாணவர்களில் ரோகிணி பாட் அடங்குவார் .

திருமணம்

[தொகு]

தார்வாடுடைச் சேர்ந்த முனைவர் சுதா என்பவரை மணந்த இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இறப்பு

[தொகு]

இவர் 1985 திசம்பர் 1 அன்று கர்நாடகாவின் ஹூப்ளியில் காலமானார். [3]

விருதுகள்

[தொகு]

இவர் 1962 இல் சங்கீத நாடக அகாதமி விருதையும், 1971 இல் கர்நாடக இசை-நிருத்ய அகாதமி விருதையும், 1981 இல் உத்திரபிரதேச சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார். [2]

குறிப்புகள்

[தொகு]
  1. Shah, Purnima (2004). "2004 Barbara Stoler Miller Conference". Dance Research Journal (Congress on Research in Dance) 36 (2). doi:10.2307/20444596. (subscription required)
  2. 2.0 2.1 Dadheecha, Puru (2013). कथक नृत्य शिक्षा (in இந்தி). Vol. 2 (5th ed.). Indore: Bindu Prakashan. pp. 143–144. இணையக் கணினி நூலக மைய எண் 20918082.
  3. "Obituaries". Quarterly Journal (Bombay: National Centre for the Performing Arts, India) 15-16: 70. 1987. இணையக் கணினி நூலக மையம்:1790494. https://books.google.com/books?id=uMaHzz6sukAC.