மொற் பர்த்
மொற் பர்த் என்பது தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் எனும் பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.[1] இம்மக்களின் வாழ்விடங்கள் "மந்து" எனப்படுகின்றன.[1]
இவர்கள் தங்கள் சொத்தாகக் கருதுவது எருமைகளையே. சைவர்களான இவர்கள் பால் பொருட்களையே உணவாகக் கொண்டவர்கள். அன்றாட வாழ்வில் எருமைக்கு முக்கிய இடம் கொடுக்கின்றனர்.[1] தங்கள் வாழ்வு செழிக்கவும் எருமைகளின் நலம் வேண்டியும் கொண்டாடப்படும் விழாவே மொற் பர்த் விழாவாகும். இவ்விழா மார்கழி மாதத்தில் நடைபெறும். தலைக்குந்தாவிற்கு அருகில் அமைந்துள்ள முத்தநாடு மந்துவில், எல்லோரும் கூம்புக் கோவிலில் கூடிக் கொண்டாடுகின்றனர். கூம்புக் கோவில் மூன்போ எனப்படுகிறது. ஓடையாள்போ என்பது மற்றொரு கோவிலாகும்.[1] கோவிலுக்குள் செல்ல ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்கள் பாரம்பரிய உடையணிந்து சென்று மண்டியிட்டு வணங்குவர்.[2]
விழா முடியுமுன் ஆண்களும் பெண்களும் கொண்டாடத்தில் பங்கு கொள்கின்றனர். பாரம்பரிய பாடல்களைப் பாடி அனைவரும் நடனமாடுவர். பின்பு பால், தயிர், நெய், இனிப்பு வழங்கி மகிழ்வர். இளையவர்கள் பெரியவர்களின் ஆசியினைப் பெறுவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "எருமைகள் விருத்தி அடைய வேண்டி தோடர்கள் கொண்டாடும் 'மொற் பர்த்'பண்டிகை". தி இந்து. 20 டிசம்பர் 2015. Retrieved 21 திசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "தோடரின மக்களின் பாரம்பரிய மொற்பர்த் பண்டிகை!". தினமலர். 3 அக்டோபர் 2013. Retrieved 21 திசம்பர் 2015.