உள்ளடக்கத்துக்குச் செல்

மொய் விருந்து விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொய் விருந்து விழா (Moi Virundhu Festival) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி வட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.[1]

ஒரு நபர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒவ்வொரு இடத்திலும் 05 முதல் 15 நபர்களுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்துவர். விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கறி விருந்து பரிமாறப்படும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் பல இடங்களில் மொய் விருந்து நடக்கும். மொய் விருந்து நடத்துபவர்களுக்கு லட்சங்களிலும், கோடிகளிலும் மொய் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. [2]

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு, கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பணத்தேவை இருக்கும் சமயங்களில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இவ்விழா நடத்தப்படுகிறது. மொய்விருந்து விழா என அழைப்பிதழும் அச்சடிக்கப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறார்கள்.[3]

சா்ச்சைகள்

[தொகு]

மொய் விருந்து விழாவினால் மிகவும் பயன்பெறுபவா்கள் வசதி படைத்தவா்கள் என்றும் இவா்கள் போட்ட மொய்யினை நான்காண்டுகள் கழித்து வட்டியும் முதலுமாக வசூலித்து அதிக பயன் பெறுகிறாா்கள் என்றும் பரவலாக ஒரு கருத்து பேசப்படுகிறது. இவ்விழாக்களில் பங்கெடுத்துக்கொள்ளும் ஏழை மக்கள் கட்டாயமாக மொய் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறாா்கள் என்றும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்_விருந்து_விழா&oldid=4034791" இலிருந்து மீள்விக்கப்பட்டது