உள்ளடக்கத்துக்குச் செல்

மொபசர் ஜாவேத் அக்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொ. ஜா. அக்பர்
மொ. ஜா. அக்பர் 2014-ல்
வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
5 சூலை 2016 – 17 அக்டோபர் 2018
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில்
சூன் 2016 – 29 சூன் 2022
தொகுதிமத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மொபசர் ஜாவேத் அக்பர்

11 சனவரி 1951 (1951-01-11) (அகவை 73)
தெலஞ்சிபாரா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1989–2014)
பாரதிய ஜனதா கட்சி (2014 முதல்)
வேலைஊடகவியலாளர், அரசியல்வாதி, எழுத்தாளர்

மொபசர் ஜாவேத் அக்பர் (Mobashar Jawed Akbar) (பிறப்பு: 11 சனவரி 1951) என்பவர் இந்திய நாடாளுமன்ற மேனாள் மாநிலங்களவை உறுப்பினரும்[1] நரேந்திரமோதியின் அமைச்சரவையில், இந்திய வெளியுறவுத் துறையில் இணை அமைச்சராக 17 அக்டோபர், 2018 வரை பணியாற்றியவர். மி டூ இயக்கத்தால் ஏற்பட்ட பிணக்கால் அமைச்சர் பதவிலிருந்து விலகினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும், மற்றும் இதழாளராகவும் பணியாற்றியவர்.

முன்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1989 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] பின்னர் மார்ச் 2014-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய அக்பர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மக்கள் செய்தித் தொடர்பாளர் ஆனார். சூலை 2015-இல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்பர் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, தி டெக்கன் குரோனிக்கள், ஆசியன் ஏஜ் போன்ற பல செய்தித்தாள்களில் ஊடகவியலாளராக பணியாற்றியவர். மேலும் காஷ்மீர், ஜவஹர்லால் நேரு குறித்து பல நூல்களையும் இயற்றியுள்ளார்.

பிணக்குகள்

[தொகு]

மி டூ இயக்கம் மூலம் பல பெண் ஊடகவியலாளர்கள், அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து டுவிட்டரில் செய்திகள் வெளியிட்டத்தைத்[3][4][5][6][7] தொடர்ந்து தனது இணைஅமைச்சர் பதவியிலிருந்து 17 அக்டோபர், 2018 அன்று விலகினார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Muslim Women Will No Longer Live Under Fear Of Talaq: MJ Akbar".
  2. "Dial-a-divorce against spirit of Islam: M J Akbar".
  3. "#MeToo campaign: Six women speak up, accuse Minister M J Akbar of sexual harassment when he was Editor" (in en-US). The Indian Express. 2018-10-10. https://indianexpress.com/article/india/metoo-movement-six-women-speak-up-accuse-minister-mj-akbar-of-sexual-harassment-when-he-was-editor-5394625/. 
  4. https://www.firstpost.com/politics/mj-akbar-must-resign-if-former-journalist-cant-explain-sexual-harassment-charges-says-congress-jaipal-reddy-5352051.html
  5. https://thewire.in/media/mj-akbar-sexual-harassment
  6. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mj-akbar-faces-metoo-heat-asked-to-cut-short-nigeria-visit-may-be-back-today/articleshow/66157559.cms
  7. https://www.financialexpress.com/india-news/metoo-sexual-harrassment-charges-against-mj-akbar-put-modi-government-in-a-spot-final-call-likely-soon/1345170/
  8. "MJ Akbar Resigns Over #Metoo Allegations". headlinestoday.org இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017203218/https://headlinestoday.org/national/3793/mj-akbar-resigns-over-metoo-allegations/. பார்த்த நாள்: 17 October 2018. 
  9. "central-minister-mj-akbar-resigns-over-sexual-harassment-charges". thenewsminute.com. https://www.thenewsminute.com/article/central-minister-mj-akbar-resigns-over-sexual-harassment-charges-90121. பார்த்த நாள்: 17 October 2018. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொபசர்_ஜாவேத்_அக்பர்&oldid=4087556" இலிருந்து மீள்விக்கப்பட்டது