உள்ளடக்கத்துக்குச் செல்

மொன் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொன் மாநிலம்
மாநிலம்
မွန်ပြည်နယ်
மொன் மாநிலம்-இன் கொடி
கொடி
Location of Mon State in Myanmar
Location of Mon State in Myanmar
நாடு மியான்மர்
மாநிலம்தெற்கு
தலைநகர்மாவலமயீனி
பரப்பளவு
 • மொத்தம்12,296.6 km2 (4,747.7 sq mi)
 • பரப்பளவு தரவரிசை12 வது
மக்கள்தொகை
 (2014 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[1]
 • மொத்தம்20,54,393
 • தரவரிசை9 வது
 • அடர்த்தி170/km2 (430/sq mi)
Demographics
நேர வலயம்ஒசநே+06:30 (MST)
இணையதளம்www.monstate.gov.mm


மொன் மாநிலம் மியான்மர் அரசின் ஒரு நிர்வாகப் பிரிவு மாகாணம் ஆகும். இது கிழக்கில் கயின் மாநிலம், மேற்கில் அந்தமான் கடலும், வடக்கில் பகோ மாகாணமும் மற்றும் தெற்கில் தாநின்தாரீ மாகாணமும் எல்லைகளாக சூழப்பட்டுள்ளது. தென்கிழக்கு முனையில் தாய்லாந்தின் காஞ்சனபுரி மாகாணத்துடன் ஒரு குறுகிய எல்லையும் உள்ளது. நிலப்பகுதி 12,155 கிமீ2 ஆகும். தாவநா மலைத்தொடர் மாநிலத்தின் கிழக்கு பக்கம் NNW–SSE என்ற திசையில் செல்வதால், கயின் மாநிலத்துடன் ஒரு இயற்கையான எல்லையாக அமைந்துவிட்டது. மொன் மாநிலம், காலிகுக், வ கயுன் மற்றும் கயுன்மகி தீவு போன்ற சிறிய தீவுகளை கொண்டுள்ளது, மொத்தம் 566 கிமீ நீலமான கடற்கரையை கொண்டுள்ளது.

மொன் மாநிலத்தின் தலைநகரம் மவலாமைநி


வரலாறு

[தொகு]

காலநிலை மற்றும் வானிலை

[தொகு]

மொன் மாநிலம் ஒரு வெப்பமண்டல காலநிலை கொண்ட பகுதியில் உள்ளது. புவியியல் ரீதியாக குறைந்த அட்சரேகை மண்டலத்தில் அமைந்துள்ளது மற்றும் கடல் அருகே அமைந்துள்ளது. மாநிலத்தில் வெப்பநிலைகளில் சிறிய மாற்றங்கள் மட்டுமே உள்ளன. சனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 78° F (25.6° C) மற்றும் ஏப்ரல் மாதத்தில் 85° F (29.4° C) ஆகும். மவலாமைனின் வருடாந்தர மழைப்பொழிவின் அளவு சராசரி 190 அங்குலம் (4.8 மீ) மற்றும் தடானில் சராசரி 217 அங்குலங்கள் (5.5 மீ) ஆகும். ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்_மாநிலம்&oldid=2645429" இலிருந்து மீள்விக்கப்பட்டது