மொசில்லா தண்டர்பேர்டு
மொசில்லா தண்டர்பேர்டு | |
![]() | |
---|---|
![]() மொசில்லா தண்டர்பேர்டு 2.0.0.0 குனூ/லினக்ஸ் | |
பராமரிப்பாளர்: | மொசில்லா காப்ரேஷன் |
மென்பொருள் வெளியீடு: | 3.0.5 (ஜூன் 17, 2010) 3.1 (ஜூன் 24, 2010) [+/-] |
மேலோட்ட வெளியீடு: | none (n/a) [+/-] |
இயங்குதளம்: | பல் இயங்குதளம் |
கிடைக்கும் மொழி(கள்): | பன்மொழிl |
பயன்: | மின்னஞ்சல வாங்கி செய்தி வாங்கி |
உரிமம்: | MPL/GPL/LGPL tri-license |
இணையத்தளம்: | தண்டர்பேர்டு |
மொசில்லா தண்டர்பேர்டு் மொசில்லா நிறுவனத்தால் விருத்தி செய்யப்பட்ட ஓர் மின்னஞ்சல், செய்திகளை வாசிக்கும் ஓர் வாங்கி (கிளையண்ட்) ஆகும். மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியைத் தொடர்ந்து இம்மென்பொருள் விருத்தி செய்யப்பட்டது. 7 டிசம்பர் 2004 இல் இதன் முதலாவது பதிப்பு வெளியாகியது. இதன் முதலாவது பதிப்பு வெளியாகி 3 நாட்களுக்குள்ளேயே 500, 000 இற்கு மேற்பட்ட பதிவிறக்கத்தைத் தாண்டியது.[1] முதற் 10 நாட்களுக்குள் 1, 000, 000 பதிவிறக்கத்தைத் தாண்டியது.[2] இதன் முதலாவது பதிப்பு வெளியாகியதில் இருந்து 78 மில்லியன் தடவைகளுக்கு அதிகமாக இது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.[3]
வசதிகள்
[தொகு]மொசில்லா தண்டர்பேடு ஓர் இலகுவான மின்னஞ்சல் மற்றும் செய்தி ஓடை படிக்கும் மென்பொருள் ஆகும்.
மின்னஞ்சல்களைக் கையாளுதல்
[தொகு]மொசில்லா தண்டர்பேர்டு ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை நிர்வாகிக்கக் கூடியது. இதன் வசதிகளுள் வேகமாகத் தேடல் தேடல்களைச் சேமித்தல், மேம்படுத்தப்பட்ட செய்திகளை வடிகட்டும் தொழில் நுட்பம் ஆகியன அடங்கும். மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் போன்றல்லாது தண்டர்பேர்ட் இன் கோப்புறையானது தமிழ்ப் பெயரிலும் அமையலாம்.
எரிதங்களைக் கையாளுதல்
[தொகு]மொசில்லா தண்டர்பேர்டு பேசியன் எரித வடிகட்டலை உள்ளடக்கியுள்ளதோடு வழங்கி (செர்வர்) ஊடான ஸ்பாம் அசாசின் ஐயும் இனம் காணக் கூடியது.
டெம்லேட்டுக்கள்
[தொகு]அடிக்கடி ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை அனுப்புவர்களுக்கு (எடுத்துக்காட்டாக கிளை அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு ஒவ்வொருநாளும் விற்பனை பற்றிய மின்னஞ்சல்கள் அனுப்புவர்களுக்கு) வசதியாக டெம்லேட்டுக்கள் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதில் பயனர் தாம் விரும்பியவாறு மின்னஞ்சலைத் தட்டச்சுச் செய்துவிட்டு டெம்லேட்டுக்களாகச் சேமித்துவிட்டு அதைமீண்டும் மீண்டும் விரும்பியவாறு பயன்படுத்தலாம்.
சீர்தர ஆதரவு
[தொகு]தண்டர்பேர்டு பாப் (POP) மற்றும் ஐமாப் (IMAP) முறையில் மின்னஞ்சலை அணுகக்கூடியது.
பல் இயங்குதள ஆதரவு
[தொகு]தண்டர்பேர்டு பல இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் பிரதான தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி
இலவசமாகக் கிடைக்கும் மூலநிரலை கம்பைல் பண்ணுவதன் மூலம் பல்வேறுபட்ட இயங்குதளங்களில் இயக்க முடியும்.
சர்வதேசமயமாக்கலும் உள்ளூர் மயமாக்கலும்
[தொகு]பல்வேறுபட்ட நாடுகளில் இருந்தும் பங்களிப்பவர்களால் 36 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொசில்லா தண்டர்பேர்டு கிடைக்கின்றது.
பதிவிறக்கம் செய்யும் கோப்பின் அளவை மட்டுப்படுத்தும் வசதி
[தொகு]மைக்ரோசாப்ட் அலுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றல்லாது பதிவிறக்கம் செய்யும் கோப்பின் அளவை மட்டுப்படுத்தவியலும். இது கணினிகளில் அழைத்து இணையும் (டயல்-அப்) பயனர்களுக்குப் பிரயோசனமான ஒன்று தேவை என்றால் மாத்திரம் மிகுதி மின்னஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். இம்முறையால் அதற்குப் பின்னுள்ள மின்னஞ்சகளைக் காலதாமதமாகப் பெறுதல் ஏற்படாது. இதற்கு ரூல்ஸ் மெனியூ (Tools Menu)->பயனர் கணக்கு (அக்கவுண்ட்ஸ் - Accounts) -> இடவசதி (டிஸ்க்ஸ்பேஸ் Diskspace) எடுத்துக்காட்டாக 400 கிலோபைட்ஸ் என்றவாறு தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்புகள்
[தொகு]புதிய மின்னஞ்சல்களைப் பார்க்க
[தொகு]புதிய மின்னஞ்சல்கள் வந்ததும் கணினித் திரையில் இடது கரை மூலையில் புதிய மின்னஞ்சல் வந்ததாகக் காட்சியளிக்கும் அங்கு சொடுக்குவதன் (கிளிக்) மூலமோ அல்லது தணடர்பேர்டில் n என்ற விசைபலகையை அழுத்துவதன் மூலமோ செல்லலாம்.
மின்னஞ்சலை சேமித்து மீள்வித்தல்
[தொகு]விண்டோஸ் கணினிகளில் Start -> Run -> %AppData%\Thunderbird\Profiles\ என்று தட்டச்சுச் செய்ததும் ஒரே எழுமாற்றுப் பெயர் முனனாலும் பின்னாலும் default பின்னாலும் உள்ள ஒரு கோப்புறை காட்சியளிக்கும். இதில் உள்ள அனைத்தையும் இறுகுவட்டிலோ அல்லது வேறேதாவது ஒரு சேமிப்பு ஊடகத்தில் சேமித்து விட்டு பின்னர் தேவையானபோது பின்னர் இதே இடத்தில் மீள்வித்துவிட்டால் மின்னஞ்சல்கள் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளலாம்.
மூலம்
[தொகு]- ↑ "மூன்று நாட்களுக்குள்ளாகவே தண்டர்பேர்டு ஐந்து இலட்சம் பதிவிறக்கம்". Archived from the original on 2012-02-11. Retrieved 2009-01-08.
- ↑ "பத்து நாட்களுக்குள்ளாகவே மில்லியன் பேர் பதிவிறக்கம்". Archived from the original on 2013-07-08. Retrieved 2009-01-08.
- ↑ மொசில்லா தண்டர்பேர்டு பதிவிறக்கங்களின் எண்ணிக்கை