மொகிந்தர் சிங் கேபி
Appearance
மொகிந்தர் சிங் கேபீ Mohinder Singh Kaypee | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009 - 2014 | |
பின்னவர் | சந்தோக் சிங் சவுத்ரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 நவம்பர் 1956 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | தர்சன் சிங் கேபீ |
மொகிந்தர் சிங் கேபி (Mohinder Singh Kaypee) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மொகிந்தர் சிங் கேபி ஒரு தலித் குடும்பத்தில் தர்சன் சிங் கேபி மற்றும் கரண் கவுர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 1992 ஆம் ஆண்டில் காலிசுதானி போராளிகளால் கொல்லப்பட்டார் [1]
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார்.
அரசியல்
[தொகு]- 2009 ஆம் ஆண்டில் இவர் சலந்தர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2] ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஓசியார்பூர் தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விச்சய் சாம்ப்லாவிடம் தோல்வியடைந்தார்.
- மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டில் விளையாட்டு மற்றும் இளைஞர்களுக்கான மாநில அமைச்சராக இருந்தார்.[3]
- பஞ்சாப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[4]
- பஞ்சாப் மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி வாரியத்தின் தலைவராக இருந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Is it end of the road for politically powerful Dalit clans of Doaba?" (in ஆங்கிலம்). 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
- ↑ "Humble, but encore unlikely". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
- ↑ Service, Tribune News. "Chaudhary tries to pacify ex-MP Kaypee". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Service, Tribune News. "Once Tech Edu Minister, Kaypee settles for chairman of its board". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.