உள்ளடக்கத்துக்குச் செல்

மைலாரா கூடுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைலாரா கூடுகை என்பது தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் எட்டு முதல் பத்து இலட்சம் வரையிலான மக்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கண்காட்சி கூடுகையாகும்.கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தின் ஹடகாலி தாலுகாவில் அமைந்துள்ள மைலாரா, ஒரு ஆன்மிக யாத்ரீக மையமாக அமைந்துள்ளது. [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றில் இருந்து சுமார் இரண்டு கி. மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு மைலாரா லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கர்னிகோட்சவா[1] அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும் கர்நாடகாவின் குருபா கவுடா சமூகம் பின்பற்றும் ஒரு பழங்கால பாரம்பரிய நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும்இந்த கூடுகையின் போது ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நியமிக்கப்பட்ட கோரவா, பத்து அல்லது பன்னிரண்டு அடி மர வில்லின் மேல் நின்று, வரும் ஆண்டில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் கூறி, உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பக்தர்களால் பிடிக்கப்படுகிறார். மைலாரா லிங்கேஷ்வராவினைப் பின்பற்றி வாழ்கின்ற கோரவா சமூகத்தினர், கம்பளியாலான தலைக்கவசம் மற்றும் பாரம்பரிய மேலங்கி அணிந்து, தீர்க்கதரிசனம் சொல்லும் இறுதி நாள் உட்பட இவ்விழாவின் பன்னிரண்டு நாட்களும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் வரும் பாரத முழு நிலவு அன்று அந்த கோவிலின் கடவுளான ஏழுகோட்டி தனது மனைவி கங்கமலவ்வாவுடன் வெள்ளை குதிரையில் சவாரி செய்வார் என்று நம்பப்படுகிறது. அவரது வருகையின் போது இடி மற்றும் மின்னல் தவறாது வரும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும். மேலும் இவருக்கு வாழைப்பழம், சர்க்கரை, நெய் மற்றும் பால் போன்றவை ஒன்றாக கலக்கப்பட்டு செய்யப்படும் நைவேத்தியம் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்பட்டு, அவரது பக்தர்களால் படைக்கப்படுகிறது. [2]

இங்குள்ள கடவுள் ஏன் ஏலுகோட்டி என்ற பெயரைப் பெற்றார் என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை வழங்கப்படுகிறது. வெங்கடாசலபதி எனப்படும் விஷ்ணுவின் அவதாரத்திற்கு, சிவனால் அவரது திருமணத்திற்காக எள்ளு கோடி (7 கோடி) கடனாக கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த பணத்தை அவர் இன்னமும் திரும்ப கொடுக்கவில்லை என்பதால், கோபத்தில் உள்ளதாகவும், அவரை சமாதானப்படுத்தும் விதமாகவே பக்தர்கள் அனைவரும் இந்த கூடுகையின் போது ஏலு கோட்டி<nowiki>, >ஏலு கோட்டி என்று அழைப்பார்கள். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mylara jatra attracts 10 lakh devotees on penultimate day". The Hindu. 2010-02-02. Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2010-12-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "மைலாரலிங்கேஷ்வர் கர்னிகா 2022" இம் மூலத்தில் இருந்து 2022-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221205183416/https://kannada.oneindia.com/news/karnataka/vijayanagara-hoovinahadagali-taluk-s-mylara-lingeshwara-karnika-2022-predictions-explained-248192.html. 
  3. "மைலாரா கண்காட்சி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலாரா_கூடுகை&oldid=3702248" இலிருந்து மீள்விக்கப்பட்டது