உள்ளடக்கத்துக்குச் செல்

மேலப்பாதி சுரகரேசுவரசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலப்பாதி சுரகரேசுவரசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவில் உப்புநகர் என்னும் ஊரை அடுத்து அமைந்துள்ளது.

அமைப்பு

[தொகு]

இக்கோயில் முழுவதும் கற்றளியாக உள்ளது. மகாமண்டபத் தூண்களில் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலவர் விமானம் துவிதளம் அமைப்பில் உள்ளது. நான்கு தலைகளைக் கொண்ட பிரம்ம சண்டிகேஸ்வரர் உள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். திருமால் வழிபட்டதைக் குறிக்கும் வகையில் சங்கரநாராயணர் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார்.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சுரகேசுவரர், இறைவி சுந்தரநாயகி. கடும் சுரத்தைத் தீர்த்துவைக்கும் இறைவனாக சிவன் எழுந்தருளியுள்ளார். பல கோயில்களில் சுரகரேசுவரர் மூன்று கால்களோடும், மூன்று முகங்களோடும் காணப்படுவார். இங்கு லிங்கத்திருமேனியாக, மூலவராகக் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.[1]

வரலாறு

[தொகு]

தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னன் பூம்புகார்-காவிரி ஒன்றுகூடும் இடத்தில் வழிபடச் சென்றபோது அவருக்கு கடுமையான சுரம் ஏற்பட்டதாகவும், அப்போது அருகிலிருந்த சிவனை வழிபட்டு துயர் நீங்கப்பெற்றதாகவும் தலபுராணம் வழியாக அறியமுடிகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014