உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கோட்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றை மேற்கோள் குறி சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் இடப்படுகின்றது.[1][2][3]

எடுத்துக்காட்டு:

  • பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்".

பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.

எடுத்துக்காட்டு:

  • ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.
  • ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

இரட்டை மேற்கோள் குறி: தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.

எடுத்துக்காட்டு:

  • “அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.
  • நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lunsford, Susan (2001). 100 Skill-Building Lessons Using 10 Favorite Books: A Teacher's Treasury of Irresistible Lessons & Activities That Help Children Meet Learning Goals In Reading, Writing, Math & More. Teaching Strategies. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780439205795.
  2. Hayes, Andrea (2011). Language Toolkit for New Zealand 2. Cambridge University Press. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107624702.
  3. "Quotation mark". Daube.ch. 6 November 1997. Archived from the original on 8 February 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கோட்குறி&oldid=4102359" இலிருந்து மீள்விக்கப்பட்டது