உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்குப் புலக் கணிப்பாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்குப் புலக் கணிப்பு அணி
West Area Computing Unit
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்மேற்குப் புலக் கணிப்பாளர்கள்
பணிநாசா கணிதவியலாளர்கள்
செயற்பாட்டுக்
காலம்
1943–1958

மேற்குப் புலக் கணிப்பு அணி (West Area Computing Unit) அல்லது மேற்குப் புலக் கணிப் பாளர்கள் (West Area Computers) நாகாவின் (பின்னர் நாசாவாக மாறிய) இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தில் 1943 முதல் 1958 வரை மாந்தக் கணிப்பாளராகப் பணிபுரிந்த அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் கணிதவியலாளர்களின் குழுவாகும். இக்குழுஈரண்டாம் உலகப் போரில் வான்பறத்தல் ஆராய்ச்சியில் பெண் கணிதவியலாளர்களாகப் பணிசெய்த பல மகளிரில் ஓர் உட்குழுவாகும். வர்ஜீனியாவின் ஜிம் குரோ சட்ட விதிகளின்படி இவர்களுக்குத் தனித்த ஓய்வறைகளும் உணவு விடுதிகளும் அமைந்தன.[1]

நாசாவின் இலாங்கிளே ஆராய்ச்சி மையம் கணிப்பாளர்களாக வேலைசெய்ய கல்லூரிப் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க மகளிரை 1940களில் பணிக்கு எடுக்கத் தொடங்கியது. மேற்குப் புலக் கணிப்பாளர்களின் பொறுப்புகளில் தரவுகளைக் கையாளலும் தேவைப்பட்டால் மற்ற குழுக்களோடு இணைந்து வேலையைத் தற்காலிகமாகச் செய்தலும் அடங்கும்.[1]

பிவெர்லி ஈ. கோலெம்பாவின் வெளியிடப்படாத ஆய்வின்படி, மேற்குப் புலக் கணிப்பாளர்களைப் பற்றி இலாங்கிளேவில் வேலை செய்த மற்ற பெண்களுக்கு எதுவுமே தெரியாது.[2] கோலெம்பே ஒரு திட்டத்தில் வெள்ளைப் பெண்மணிகளும் கருப்புப் பெண்மணிகளும் பணியில் அமர்த்தியபோது இருதரப்பிலும் ஒவ்வொருவருமே நன்றாகவே பணியாற்றியுள்ளனர் எனத் தன் நேர்காணல்கள் வழியாக உறுதிப்பட்டதாகக் கூறுகிறார்.[1][3][4]

முதலில் இந்த அணித்தலைவராக வெள்ளையரே இருந்தனர். ஆனால், 1949 இல் தோரதி வவுகான் இந்த அணியின் பொறுப்பை ஏற்றார். இவர்தான் நாசாவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க மேலாளர் ஆனார். வவுகான் 1943 இல் இருந்து தான் ஓய்வு பெற்ற 1971 வரை இலாங்கிளேவில் பணி செய்த கணிதவியலாளர் ஆவார்.[5]

நாகா (NACA), நாசா (NASA)வாகப் பெயர்மாற்றம் பெற்றதும், தனிப்பிரிப்பு ஏந்துகள், மேற்குப் புலக் கணிப்பு அலுவலகம் உள்ளிட்டவை கலைக்கப்பட்டன.[5]

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கத்தை 2015 இல் பெற்ற கணிதவியலாளர் காத்தரைன் ஜான்சன் 1953 இல் மேற்குப் புலக் கணிப்புக் குழுவில் சேர்ந்தார். பின்னர், இவர் இலாங்கிளே பரப்பு ஆராய்ச்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இங்கு இவர் அறிவன் கோள் வட்டணை பறப்பு திட்டம், விண்வலவர் கிளென் வழித்தடப் பகுப்பாய்வு உட்பட பல அறிய கணிப்புப் பணிகளை ஆற்றியுள்ளார்.[6] பொறியாளராகிய மேரி ஜாக்சனும் மேற்குப் புல அணியில் பணி செய்தார்.[7] மறைநிலை ஆளுமைகள் எனும் திரைப்படம் 2016 இல் எடுக்கப்பட்டது. இதில் வவுகான், ஜான்சன், ஜாக்சன் ஆகிய மூன்று மாந்தக் கணிப்பாளரின் பணிகளும் காட்டப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 McLennan, Sarah (2011). "Human Computers". நாசா Cultural Resources. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  2. "Beverly E. Golemba Papers, MS 307, Archives of Women in Science and Engineering, Special Collections Department". Iowa State University Library. Archived from the original on 2 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. ""Panel Discussion with Women Computers" NASA Langley videotape". December 13, 1990. 
  4. Beverly Golemba, Human Computers: The Women in Aeronautical Research, unpublished manuscript 1994, NASA Langley Archives
  5. 5.0 5.1 Loff, Sarah (22 November 2016). "Dorothy Vaughan Biography" (in en). நாசா. https://www.nasa.gov/content/dorothy-vaughan-biography. 
  6. "West Area Computers - Trailblazers in American Space History" (PDF). Center for the History of Physics at AIP. Summer 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  7. Shetterly, Margot Lee (2016-09-06). Hidden Figures: The American Dream and the Untold Story of the Black Women Mathematicians Who Helped Win the Space Race (in English). William Morrow. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780062363596.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)