மேற்காவுகை
Appearance

திரவங்களிலும் வாயுக்களிலும் வெப்பம் கடத்தப்படும் முறையே மேற்காவுகை அல்லது உடன்காவுகை (convection) எனப்படும். திண்மப் பொருட்களில் வெப்பம் வெப்பக் கடத்தல் மூலமே கடத்தப்படும் இவை . வெப்பம் கடத்தப்படும் மூன்று முறைகளில் ஒன்றாகும். புவியின் வளிமண்டலம், பெருங்கடல்கள்,மூடகம் என்பனவற்றில் மேற்காவுகையானது தாக்கம் செலுத்துகின்றது. இதுவே முகில்கள், இடியுடன் கூடிய மழை ஆகியவை உருவாகவும் காரணமாகும்.
மேற்காவுகைக்கான எடுத்துக்காட்டுகளும் பயன்பாடும்
[தொகு]வளிமண்டலம், கோள்களின் மூடகம், பெருங்கடல்கள் ஆகியவற்றில் மேற்காவுகையானது பேரளவில் நடைபெறுகின்றது. இந்த மேற்காவுகையானது சிலவேளைகளில் அவதானிக்க முடியாத அளவிற்கு சிறியதாகவும் சிலவேளைகளில் சூறாவளி போலப் பேரளவிலும் நடைபெறும். ஞாயிறு உட்பட அனைத்து விண்மீன்களினதும் உட்பகுதியிலிருந்து அவற்றின் மேற்பரப்புகளுக்கு மேற்காவுகை மூலமே வெப்பம் கடத்தப்படுகின்றது.