உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தைனோபியம்
இனம்:
தை. ஜாவானீனேசு
இருசொற் பெயரீடு
தைனோபியம் ஜாவானீனேசு
(லீஜூக், 1797)

மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி (common flameback) அல்லது (common goldenback woodpecker)(Dinopium javanense) என்பது ஒரு சிறிய (28-30 செ.மீ), மூன்று கால்கள் கொண்ட மரங்கொத்தி ஆகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்படுகிறது.[2]

துணையினங்கள்

[தொகு]

இதில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கிளையினங்கள் உள்ளன:[3]

பரவலும் வாழிடமும்

[தொகு]

மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியானது கூச்ச சுபாவமுள்ளதும் மறைந்து வாழும் பறவை என்பதால், பொதுவாக நகர்ப்புறங்களில் காணப்பட வாய்ப்பில்லை.[5] இவை ஈரமான அடர்த்தியற்ற காடுகள், புதர்க்காடு மற்றும் சதுப்புநிலங்கள் என பல்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை பொதுவாக தாழ்வான பகுதிகளில் வாழ்ந்தாலும், இந்தியாவில் கடல் மட்டத்திலிருந்து 1700மீ உயரம் வரை காணப்படுகின்றன மற்றும் அந்தப் பகுதிகளில் பைன் காடுகளில் வாழ விரும்புகின்றன.[4][6]

தென்கிழக்காசியா முழுவதும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முதல் இந்தோசீன தீபகற்பம் மற்றும் சுந்தா பெருந் தீவுகள் வரை அவற்றின் பரவியுள்ளன.[7]

விளக்கம்

[தொகு]

ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் உச்சந்தலையும் கொண்டையும் நிறத்தில் வேறுபடுகிறன, ஏனெனில் ஆண் பறவைகளுக்கு பிரகாசமான சிவப்பு கொண்டை உள்ளது, பெண் பறவைகளுக்கு வெள்ளை கோடுகளுடன் கருப்புக் கொண்டை உள்ளது. இரு பாலினத்தவைக்கும் வெள்ளைப் புருவம், வெள்ளை கன்னம் மற்றும் வெள்ளை தொண்டை பகுதி உள்ளன. இவை அனைத்தும் கருப்பு நிற கோடுகளைக் கொண்டுள்ளதாக உள்ளன. மேலும் இவற்றின் அடிப்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளன.[4] இந்தப் பறவையானது பெரிய பொன்முதுகு மரங்கொத்தி மற்றும் அதை ஒத்த பிற பொன் முதுகு மரங்கொத்திகளிலிருந்து இதன் சிறிய கறுப்பு முனையுள்ள அலகால் வேறுபடுகிறது. அதேபோல பொன்முதுகு மரங்கொத்தியிலிருந்து சிவப்பு பிட்டம், வெள்ளைத் தொண்டையாலும் வேறுபடுகிறது.[7]

இனப்பெருக்கம்

[தொகு]

பிப்ரவரி முதல் ஜூலை முடிய மா, வாகை, முருங்கு ஆகிய மரங்களில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும், பழக்க வழக்கம் உணவு, இனப்பெருக்கம் ஆகியன பொன்முதுகு மரங்கொத்தியதைப் போன்றனவே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Dinopium javanense". IUCN Red List of Threatened Species 2017: e.T22727182A118587434. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22727182A118587434.en. https://www.iucnredlist.org/species/22727182/118587434. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Pittie, Aasheesh & Jayapal, Rajah & Jayadevan, Praveen. (2020). Taxonomic updates to the checklists of birds of India, and the South Asian region-2020. Indian BIRDS. 16. 12-19.
  3. "Woodpeckers – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-05-09.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Winkler, Hans; Christie, David (2020-03-04), "Common Flameback (Dinopium javanense)", Birds of the World, Cornell Lab of Ornithology, retrieved 2021-11-12
  5. Yorke, Callyn D. (1984). "Avian community structure in two modified Malaysian habitats". Biological Conservation 29 (4): 345–362. doi:10.1016/0006-3207(84)90004-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3207. http://dx.doi.org/10.1016/0006-3207(84)90004-1. 
  6. L., Short, Lester (1973). Habits of some Asian woodpeckers (Aves, Picidae). [American Museum of Natural History]. OCLC 1008833.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. 7.0 7.1 "Common Flameback - eBird". ebird.org (in ஆங்கிலம்). Retrieved 2021-11-12.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Dinopium javanense பற்றிய ஊடகங்கள்