உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி கார்பெண்டர்

ஆள்கூறுகள்: 51°26′06″N 2°33′54″W / 51.435°N 2.565°W / 51.435; -2.565
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி கார்பெண்டர்
மேரி கார்பெண்டரின் பிற்கால புகைப்படம்
பிறப்பு(1807-04-03)3 ஏப்ரல் 1807
எக்ஸ்டர், ஐக்கிய ராச்சியம்
இறப்பு14 சூன் 1877(1877-06-14) (அகவை 70)
பிரிஸ்டல், ஐக்கிய ராச்சியம்
கல்லறைஅர்னாசு வேல் கல்லறை, பிரிஸ்டல்
செயற்பாட்டுக்
காலம்
1835–1877
அறியப்படுவதுகல்வி, சமூகச் சீர்திருத்தம்
சீர்திருத்தவாதிகளின் நினைவுச்சின்னத்தில் மேரி கார்பெண்டரின் பெயர், கென்சல் பசுமை கல்லறை

மேரி கார்பெண்டர் (Mary Carpenter ) (3 ஏப்ரல் 1807 – 14 ஜூன் 1877) ஒரு ஆங்கிலக் கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். ஒரு யூனிடேரியன் மந்திரியின் மகளான, இவர் ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் இலவச கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் சீர்திருத்த பள்ளிகளை நிறுவினார். பிரிஸ்டலில் ஏழை குழந்தைகள் மற்றும் இளம் குற்றவாளிகளுக்கு முன்னர் கிடைக்காத கல்வி வாய்ப்புகளை கொண்டு வந்தார்.

இவர் தனது படைப்புகளில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல கல்விச் செயல்களை நிறைவேற்றுவதில் இவரது பரப்புரை கருவியாக இருந்தது. இலண்டனின் புள்ளியியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட கட்டுரையைப் பெற்ற முதல் பெண்மணி இவர். [1] இவர் பல மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் உரையாற்றினார். மேலும் இவரது காலத்தின் முதன்மையான பொதுப் பேச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். இவர் அடிமை எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்; இவர் இந்தியாவுக்கு வந்த போது, பள்ளிகள் மற்றும் சிறைகளுக்குச் சென்றார். மேலும், பெண் கல்வியை மேம்படுத்தவும்,[2] சீர்திருத்த பள்ளிகளை நிறுவவும், சிறைச்சாலை நிலைமைகளை மேம்படுத்தவும் பணியாற்றினார். பிந்தைய ஆண்டுகளில் இவர் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்று வந்தார். மேலும், தண்டனை மற்றும் கல்வி சீர்திருத்த பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

கார்பெண்டர் தனது பிற்காலங்களில் பெண்களின் வாக்குரிமையை பகிரங்கமாக ஆதரித்தார். மேலும் உயர்கல்விக்கான பெண் அணுகலுக்காகவும் பிரச்சாரம் செய்தார். கார்பெண்டர் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் அவர் 1858 இல் ரோசன்னா என்ற ஐந்து வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்தார்.[3]

இறப்பு

[தொகு]

ஜூன் 1877 இல் தனது வீட்டில் தூக்கத்தில் இறந்தார். பிரிஸ்டலில் உள்ள அர்னோஸ் வேல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பிரிஸ்டல் கதீட்ரலின் வடக்குப் பகுதியில் இவருக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. Journal of the Royal Statistical Society. 20. 1857. https://books.google.com/books?id=lv_wAAAAMAAJ&pg=PP9. 
  2. Fawcett, Millicent Garrett (1886). Some Eminent Women of Our Times: Short Biographical Sketches. London: Macmillan. pp. 17.
  3. Nelson, Claudia (2007). Family ties in Victorian England. Praeger Publishers. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-98697-1. Archived from the original on 5 February 2023. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.
  4. Manton, Jo (1976). Mary Carpenter and the Children of the Streets. London: Heinemann. pp. 250–251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-435-32569-8.

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கார்பெண்டர்&oldid=3812405" இலிருந்து மீள்விக்கப்பட்டது