மேரி எலன் உரைட் கிரேவுட்டர்
மேரி எலன் உரைட் கிரேவுட்டர் Mary Helen Wright Greuter | |
---|---|
மேரி எலன் உரைட் கிரேவுட்டர் | |
பிறப்பு | வாழ்சிங்டன் டி.சி. | திசம்பர் 20, 1914
இறப்பு | அக்டோபர் 23, 1997 வாழ்சிங்டன் டி.சி. மாரடைப்பு | (அகவை 82)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல், வரலாறு |
பணியிடங்கள் | மவுண்ட் வில்சன் வான்காணகம் |
கல்வி | மதீரா பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | பெனட் இளநிலைக் கல்லூரி |
துணைவர் | ஜான் பிராங்ளின் ஆக்கின்சு |
மேரி எலன் உரைட் கிரேவுட்டர் (Mary Helen Wright Greuter) (திசம்பர் 20, 1914 – அக்தோபர் 23, 1997) ஓர் அமெரிக்க வானியலாளரும் வரலாற்றாசிரியரும் ஆவர்,[1] இவர் மாந்தரினவியல், தொல்லியல், இயற்பியல் உட்பட, அறிவியல் புலங்களின் வரலாற்றைப் பற்ரியும் முறையியல் பற்றியும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.
இளமை
[தொகு]இவர் வாழ்சிங்டன் டி.சி.யில் பிறந்தார். இவரது தந்தையார் புவி இயற்பியலாளராகிய பிரெடெரிக் யூகின் உரைட் ஆவார்;தய்யர் கத்லீன் எதெல் பின்லே ஆவார். இவர் தொழில்முறையில் உரைட் எனும் குடும்ப்ப் பெயரால் அழைக்கப்பட்டவர் ஆவார். இவரது உடன்பிறப்புகளாக வில்லியம் எஃப். உரைட், கென்னத் ஏ. உரைட் ஆகிய இருவரும் அடங்குவர்.[2] Wright was educated at Madeira School.[3] இவர் 1934 இல் தன் பென்னெட் இளையோர் கல்லூரியில் படித்து முடித்து வாசர் கல்லூரியில் இளவல் பட்டத்தை 1937 இல் பெற்றார். வானியல் முதுவர் பட்டத்தை வானியலில் 1939 இல் பெற்றார்.[2]
வாழ்க்கைப்பணி
[தொகு]கார்னிகி அறிவியல் நிறுவனத்தின் மவுண்ட் வில்சன் வான்காணக நிலாத் திட்டத்தை வழிநடத்திய தன் தந்தை வழியாக அவ்வான்காணக மக்களோடு நஙு அரிமுகமாகி இருந்தார். இவர் 1937 இல் அங்கு தொலைநோக்கி வரலாறு பற்றி ஆய்வுசெய்யும் உதவியாளராக பணியில் சேர்ந்தார்;[4] அந்த ஆண்டே வாசர் கல்லூரி வான்காணக உதவியாளரானார்.[3] இவர் 1942-43 இல் அமெரிக்க நாவாய் வான்காணக இளநிலை உதவியாளராக வாழ்சிங்டன் டி.சி,யில் பணிபுரிந்தார்; அப்போது பலோமார் வான்காணகத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்.[2] இவர் 1943 இல் இயல்பாக எழுதும் ஆசிரியரும் பதிப்பாளரும் ஆனார்.[5] இவரது மிகச் சிறந்த நூல்களில் புடவித் தேட்ட வல்லுனர்: ஜார்ஜ் எல்லேரி ஏலின் வாழ்க்கை (1966), வானளந்த பெண்மணி: மரியா மிட்செலின் வாழ்க்கை (1949) ஆகியவை அடங்கும்.[2] உரைட் அமஎரிக்க வானியல் கழகம், அறிவியல் குமுக வரலாறு, பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆவார்.[5]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் முதலில் ஜான் பிராங்ளின் ஆக்கின்சு எனும் ஓவியரை மணந்து மணவிலக்கு பெற்றார் பின்னர், இரேனே கிரேவுட்டரை 1967 இல் மணந்தார்.[5] இருந்தும் இவருக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை.[6] இவர் கோடைகளில் சகாசுதவேகா திவில் தங்கினார்;[7] இவருக்கு வாழ்சிங்டன், நியூசெர்சி, நாந்துகெட் ஆகிய இடங்களைல் வீடுகள் வைத்திருந்தார். இவருக்குச் சிற்பவேலை செய்ய மிகவும் பிடிக்கும். இவர் மாரடைப்பால் 1997 இல் வாழ்சிங்டன் டி.சி யில் இறந்தார்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mary Helen Wright Greuter (1914-1997)". Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Saxon, Wolfgang (November 2, 1997). "Helen Wright Greuter, 82, Astronomer and Author". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/1997/11/02/us/helen-wright-greuter-82-astronomer-and-author.html. பார்த்த நாள்: 20 January 2013.
- ↑ 3.0 3.1 DeVorkin, David (November 1997). "H. A. D. News". The Newsletter of the Historical Astronomy Division of the American Astronomical Society (42): 6. https://docs.google.com/viewer?a=v&q=cache:BVCCgzJe8XwJ:had.aas.org/hadnews/HADN42.pdf+&hl=en&gl=us&pid=bl&srcid=ADGEESiicSlkJl9S8b82cwNvjAnW3xn3rQLumxHip_DrcJwJvlZ5Lyt6a3RbtuYjRccamXkQE2WtOIJqm8gvIY7HwsSuJ4KQuIrp0-Ws4OsCjv06oP41FowfjIc42psJnm1RDC6EPoye&sig=AHIEtbT-FSsV47Sk6eJN5xpovkFEOOk7yg.
- ↑ Current Biography Yearbook. H. W. Wilson Co. 1957. p. 657. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
- ↑ 5.0 5.1 5.2 Reginald, R.; Menville, Douglas; Burgess, Mary A. (September 2010). Science Fiction and Fantasy Literature. Wildside Press LLC. pp. 1134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-941028-77-6. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
- ↑ United States Naval Observatory (1999). Proceedings, Nautical Almanac Office Sesquicentennial Symposium: U.S. Naval Observatory, March 3-4, 1999. U.S. Naval Observatory. p. 172. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
- ↑ Smith, Susan (10 August 1993). The first summer people: the Thousand Islands 1650-1910. Stoddart. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55046-037-7. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.