உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்
ஆர்தேசிரின் மருத்துவ பட்டப்படிப்பு புகைப்படம் 1897
பிறப்பு25 மே 1868
[[பம்பாய் மாகாணம்|தற்போதைய மும்பை]]
இறப்பு9 ஏப்ரல் 1941 (age 72)
[[பம்பாய் மாகாணம்|தற்போதைய மும்பை]]
தேசியம்இந்தியர்
பணிமருத்துவர்

மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்,(25 மே 1868 - 9 ஏப்ரல் 1941) இந்திய -பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல் 25 மே 1868 ஆண்டில் தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் பார்சி வழக்கறிஞரான அர்தேசிர் ஃப்ரம்ஜி வக்கீலின் மகளாகப பிறந்தவர் [1]

பம்பாய் வில்சன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியையும், வில்சன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் பயின்று, 1888 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார், அக்காலத்தில் இத்தகைய படிப்பு முறையில் பயின்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் இவரே.[2]

மருத்துவக் கல்வி

[தொகு]

பம்பாயில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த பிறகு, ஆர்தேசிர் பெண்களுக்கான லண்டன் மருத்துவப் பள்ளியில் மருத்துவ கல்வி பயில்வதற்காக சேர்ந்துள்ளார், 1893 ஆம் ஆண்டில், அவர் கிளாஸ்கோவிலுள்ள குயின் மார்கரெட் கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார், 1897 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மருத்துவ அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார், இதன் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடர்ந்து கிளாஸ்கோவில் இரண்டு வருட முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார்.

மருத்துவ பயிற்சி

[தொகு]

ஆர்தேசிர், பம்பாயில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காமா மருத்துவமனை, பம்பாயின் பைகுல்லாவில் உள்ள பிளேக் மருத்துவமனை, குமு ஜாஃபர் சுலேமான் மருந்தகம், கபடோயாஸ், அத்துடன் பிற மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் போன்றவைகளில் மருத்துவ பணியாற்றியுள்ளார்.. மார்ச் 1927 ஆம் ஆண்டில் ஏடனுக்கு பிரித்தானிய அரசாங்கத்தில் மருத்துவராக பணியாற்ற சென்ற அவர், பின்னர் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

இறப்பு

[தொகு]

உடல்நலக் குறைவால், ஆர்தேசிர் 1941 ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய்க்குத் திரும்பினார். ஏப்ரல் 9, 1941 அன்று உடல்நலம் சரியாகாமல் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The new biographical dictionary of Scottish women. Ewan, Elizabeth. Edinburgh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781474436298. இணையக் கணினி நூலக மைய எண் 1057237368.{{cite book}}: CS1 maint: others (link)
  2. "University of Glasgow :: Story :: Biography of Merbai Ardesir Vakil". www.universitystory.gla.ac.uk. Archived from the original on 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.