உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்சிடிஸ்-பென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்சிடிஸ்-பென்ஸ்
வகைDivision of டைம்லர் ஏஜி
முந்தியதுகார்ல் பென்ஸ்
Daimler Motoren Gesellschaft
நிறுவுகை1886 (1886)
நிறுவனர்(கள்)கார்ல் பென்ஸ்
காட்லீப் டைம்லர்
தலைமையகம்இசுடுட்கார்ட்டுI, Germany
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Dieter Zetsche, Chairman
தொழில்துறைManufacturing
உற்பத்திகள்Automobiles
Trucks
பேருந்துes
உள் எரி பொறிs
சேவைகள்Financial services
தாய் நிறுவனம்Daimler AG
இணையத்தளம்www.mercedes-benz.com

மெர்சிடிஸ்-பென்ஸ் தானுந்துகள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி (Daimler AG) என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.[1][2][3]

வரலாறு

[தொகு]

1880களில் காட்லீப் டைம்லர் (1834–1900), வில்ஹெல்ம் மேபாஃக்குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த கார்ல் பென்ஸ் (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய உள் எரி பொறியால் உந்தப்பெற்ற தானுந்துதனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் டைம்லர்-பென்ஸ் என்னும் கம்பினி 1926ல் கூட்டாக உருவாகியது.

பென்ஸ் பெற்ற காப்புரிமம் அடிப்படையின் படி செய்த ஒப்புரு வண்டி. காலம் 1886 ஆம் ஆண்டு. இவ் வண்டி பெற்றோலிய எரிநீர்மத்தால் இயங்கிய உண்மையான முதல் தானுந்து என்று கருதுகிறார்கள்.
1894 ஆண்டு பென்ஸ் வேலோ என்னும் தானுந்து

அருங்காட்சியகம்

[தொகு]

இந்நிறுவனத்தின் அருங்காட்சியகம் இசுடுட்கார்ட்டு நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட இங்கு இந்நிறுவனத்தின் உலகின் முதன் தானுந்து முதல் இன்றைய தானுந்துகள் வரை வெளிவந்த தானுந்து, சரக்குந்து, பேருந்து முதலான பல வண்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Corporate governance". Mercedes-Benz AG. Archived from the original on 2 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
  2. "Mercedes-Benz posts eighth consecutive record year and maintains number 1 position in the premium segment". Archived from the original on 22 July 2019. பார்க்கப்பட்ட நாள் 18 July 2019.
  3. "About us". Mercedes-Benz AG. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சிடிஸ்-பென்ஸ்&oldid=4102323" இலிருந்து மீள்விக்கப்பட்டது